சீட்டாட்டத்தில்தான் 'மங்காத்தா' வரும். ஆனால் கிரிக்கெட்டில் வருமா? சினிமாவில் வரும்! வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மங்காத்தா' படத்தின் மையக்கரு கிரிக்கெட் சூதாட்டங்களைப் பற்றியதுதானாம். தனது முதல் படமான சென்னை-28ல் கிரிக்கெட்டை மையப்படுத்தியிருந்தார் வெங்கட். அதற்கு பிறகு அவர் இயக்கிய எந்தப் படமும் இவரது முதல் ஹிட்டை முறியடிக்கவில்லை. எதிர்மாறான விளைவாக எல்லாப் படங்களும் தோல்விதான். அதனால் தனது சென்ட்டிமென்ட் மீண்டும் வரட்டுமே என்பதற்காகவும் 'மங்காத்தா'வில் கிரிக்கெட்டை நுழைக்கிறாராம் வெங்கட் பிரபு. முக்கால் சதவீதம் நகைச்சுவை படம் இது. ஆனால் அஜித் இருப்பதால் ஆங்காங்கே துப்பாக்கிகளும் புகைச்சலும் இருக்குமாம். ஒரு முக்கியமான புகைச்சல் இப்போது. பிரேம்ஜியின் நகைச்சுவை தாங்காது என்பதால் இன்னும் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகரை உள்ளே கொண்டு வரலாமே என்றாராம் அஜித். தற்போது நகைச்சுவை நடிகரைத் தேடும் முயற்சி தீவிரமாக நடந்துவருகிறது. 'தல'ய காமெடி பீஸாக்கி பந்தாடாம இருந்தா சரி!
Latest News!
Advertisement

Related Posts
கிரிக்கெட்டும், காமெடியும் கலந்த மங்காத்தா 0 Comments
By NIshaசீட்டாட்டத்தில்தான் 'மங்காத்தா' வரும். ஆனால் கிரிக்கெட்டில் வருமா? சினிமாவில் வரும்! வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மங்காத்தா' படத்தின் மையக்கரு கிரிக்கெட் சூதாட்டங்களைப் பற்றியதுதானாம். தனது முதல் படமான சென்னை-28ல் கிரிக்கெட்டை மையப்படுத்தியிருந்தார் வெங்கட். அதற்கு பிறகு அவர் இயக்கிய எந்தப் படமும் இவரது முதல் ஹிட்டை முறியடிக்கவில்லை. எதிர்மாறான விளைவாக எல்லாப் படங்களும் தோல்விதான். அதனால் தனது சென்ட்டிமென்ட் மீண்டும் வரட்டுமே என்பதற்காகவும் 'மங்காத்தா'வில் கிரிக்கெட்டை நுழைக்கிறாராம் வெங்கட் பிரபு. முக்கால் சதவீதம் நகைச்சுவை படம் இது. ஆனால் அஜித் இருப்பதால் ஆங்காங்கே துப்பாக்கிகளும் புகைச்சலும் இருக்குமாம். ஒரு முக்கியமான புகைச்சல் இப்போது. பிரேம்ஜியின் நகைச்சுவை தாங்காது என்பதால் இன்னும் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகரை உள்ளே கொண்டு வரலாமே என்றாராம் அஜித். தற்போது நகைச்சுவை நடிகரைத் தேடும் முயற்சி தீவிரமாக நடந்துவருகிறது. 'தல'ய காமெடி பீஸாக்கி பந்தாடாம இருந்தா சரி!
Leave a reply
0 comments for "கிரிக்கெட்டும், காமெடியும் கலந்த மங்காத்தா"