
பலரும் இன்று பேருந்து நடத்துநர்களிடம் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல பேருந்துகளில் இதைக் காண முடிந்தது. சிலர் இந்த ஆட்சியை மாற்றத்திற்காகத்தான் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இப்போது ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று தோன்றுவதாகக் கூறினர்.
இன்று திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அங்குள்ள பொதுமக்களுடன் அப்பகுதிகளைச் சேர்ந்த மாணாக்கர்களும் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பால் விலையும் தங்களைக் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியிருப்பாதகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இனி கடைகளில் தேநீர் விலையும் 7 ரூபாய் அல்லது 8 ரூபாய் ஏன உயருமோ எனக் கவலையாக உள்ளது என்று மக்கள் கூறி தங்கள் நிலையை வெளிப்படுத்தினர்.
ஏழை, எளிய மக்களின் கட்டணங்களை உயர்த்தி அவர்களை மேலும் தாழ்த்தியுள்ளது அரசு.
0 comments for "உயர்தப்பட்ட கட்டணங்கள் - மக்கள் தவிப்பு"