துப்பாக்கி படத்தில் பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் விஜய்!
Posted by NIsha
விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான் கடைசியாக பாடினார்.அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன் ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.பாட வேண்டுமா.. உடனே தயார்! என்று கூறினாராம் விஜய். ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்
Posted by NIsha
துப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இந்த படத்தில் தானே நடிக்காமல் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தாராம்.இதனையடுத்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம் விஜய். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறாராம். படத்தை புது இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
தனுஷின் கொலைவெறி - 3 படத்தில் ரஜினி ?
Posted by NIsha
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு '3' என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
கோச்சடையான் தெலுங்கு உரிமை மட்டும் 30 கோடி!
Posted by NIsha
ரஜினியின் அனிமேஷன் 3 டி படமான கோச்சடையானுக்கு இதுவரை இந்திய சினிமா உலகம் பார்த்திராத அளவுக்கு விலை கொடுக்க அனைத்து மொழி விநியோகஸ்தர்களும் தயாராகி வருகின்றனர். ஒரு படம் பூஜை போடப்படும்போதே விற்று, லாபம் பார்க்கிறதென்றால் அது ரஜினி படம் மட்டுமே. காரணம், ரஜினி படம் தப்பு பண்ணாது என்ற நம்பிக்கை ஒருபக்கம்... அப்படியே நஷ்டம் என்றாலும் ரஜினி திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நினைப்பு மறுபக்கம். கோச்சடையான் படத்துக்கும் இப்போது ஏக கிராக்கி. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்கிறார். இந்தியாவில் முதன் முறையாக பர்மார்மன்ஸ் கேப்சரிங் செய்யப்படும் படம் இதுவே. அவதார், டின் டின்னுக்கு அடுத்து சர்வதேச அளவில் உருவாகும் பெரிய படம் கோச்சடையைன் என்பதால் சர்வதேச அளவிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. படத்தின் தெலுங்கு, இந்தி, மலையாள ஏரியா உரிமைகள் பெரும் விலைக்கு கேட்கப்பட்டு வருகின்றன. தெலுங்கு...
தெலுங்கில் டூப்ளிகேட் சூர்யாவின் மாற்றான்!
Posted by NIsha
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படம், தெலுங்கில் டூப்ளிகேட் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.கல்பாத்தி அகோரம் தனது ஏஜிஎஸ் பேனரில் தயாரிக்கும் படம் மாற்றான். சூர்யா ஐந்து வித்தியாசமான ரோல்களை இந்தப் படத்தில் செய்கிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பால்கன் நாடுகள் எனப்படும் ரஷ்யா, செர்பியா, குரேஷியா, மாசிடோனியா மற்றும் அல்பேனியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தப் படத்தை நேரடி தெலுங்குப் படம் என்ற அளவுக்கு பக்காவாக டப் பண்ணப் போகிறாராம் இயக்குநர் கே வி ஆனந்த். தெலுங்கு பதிப்புக்கு டூப்ளிகேட் என பெயர் சூட்டியுள்ளார்.மே அல்லது ஜூனில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது - முருகதாஸ்!
Posted by NIsha
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், என அனைத்துக்கும் போய் வந்தார்.இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
சந்தோஷ்சிவனுக்கு கால்ஷீட் - விஜய்!
Posted by NIsha
நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்.விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய் 'துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து தனது கால்ஷீட் தேதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார். இப்படத்தினை யார் தயாரிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
விக்ரம் பாண்டிராஜ் இணையும் புதிய காதல் காமெடி படம்!
Posted by NIsha
மெரினா படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்து இயக்க போகும் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த ஆண்டு இதுவரை 'மெரினா' தான் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து இருக்கிறதாம். முதல் வாரத்தில் சென்னை ஏரியாவின் விநியோகஸ்தர்கள் பங்கு மட்டும் சுமார் 45 லட்சம் என்கிறார்கள்.நான் அடுத்து இரண்டு படங்கள் கழித்து தான் சிறுவர்களை வைத்து படம் இயக்குவேன். என்னிடம் ஏழரை வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் கதை ஒன்று தயாராக இருந்தாலும் அதை நான் இப்போதைக்கு இயக்க மாட்டேன்" என்று தெரிவித்தார் பாண்டிராஜ்.இந்நிலையில் விக்ரமிடம் பாண்டிராஜ் ஒரு காமெடி கலந்த காதல் கதையைச் சொன்னாராம் பாண்டிராஜ். விக்ரமுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம். 'தாண்டவம்' படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
தில் இருந்தா சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ணுங்க - சேரன் (வீடியோ இணைப்பு)
Posted by NIsha
பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா (21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் திரு சண்முக சுந்தரம், T.K.ராமமூர்த்தி, T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், திருமதி P.சுசீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரு ராம்குமர் கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் சேரன் பேசும் போது இன்றைய நடிகர்கள் பில்லா, மாப்பிள்ளை என்று பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள். அவர்களுக்கு தில் இருந்தால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்க முடியுமா? என்று சவால் விட்டார். மேலும் அவர் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு நிகரான படம். ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுக்கிறோம் என்று சொல்கிறார்களே, சிவாஜி படம் அளவிற்கு யாராலாவது முயற்சியாவது செய்ய முடியுமா. சிவாஜி சிகிரெட் பிடிக்கும் போது விடும் புகைக் கூட ஒரு விதமான நடிப்பாகத் தான் இருக்கும். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News,...
அமலா பாலின் மூன்று படங்களும் தோல்வி!
Posted by NIsha
அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் - சகுனி!
Posted by NIsha
கார்த்தி நடித்துள்ள சகுனி படம், ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆக இருக்கிறது. புதுமுகம் சங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சகுனி. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. கடந்த வாரமே இப்படம் ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் இடையில் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவால், அதாவது பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் மட்டும் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சகுனி படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
நடிகை எஸ்.என்.லட்சுமி நேற்று நள்ளிரவில் காலமானார்!
Posted by NIsha
பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணசித்திர நடிகையாகப் பரிணமித்தார். பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக விருமாண்டி, மகாநதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பைப் பாராட்டாதவர் இருக்க முடியாது. சர்வர் சுந்தரம் படத்தில் கண்டிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கு வலுவூட்டின. தேனும் பாலும் படத்தில் சரோஜா தேவிக்கு தாயாக, மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் ஊர்வசியின் பாட்டியாக, மகாநதியில் கமலின் மாமியாராக, தேவர் மகன் படத்தில் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் என அவருடைய நடிப்புலக பயணம் மிக நீண்டது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal,...
பில்லா 2 ஷூட்டிங்கை நிறுத்த கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகை!
Posted by NIsha
அஜீத் பட ஷூட்டிங்கை நிறுத்த கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பள பிரச்னை காரணமாக தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் பாதித்திருக்கிறது. ஆனால் ஒரு சில படங்களின் ஷூட்டிங் மட்டும் வெளியூர்களில் நடக்கிறது. அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், தமிழ் படவுலகம் ஸ்டிரைக்கில் இருக்கிறது. உங்கள் பட ஷூட்டிங்கை எப்படி நடத்தலாம். உடனே ஷூட்டிங்கை நிறுத்துங்கள் என்று கூறி முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, "இப்படத்தில விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர். குறிப்பிட்ட சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது. சம்பள பிரச்னையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின்...
பிரமாண்டமான புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!
Posted by NIsha
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண - வரலாற்றுப் படம் கர்ணன்.பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம்.பெற்ற தாய்க்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே வரம் அளித்த பெருமைக்குரிய தர்மவான் கர்ணன். தர்மதேவனையும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட வைத்த கர்ணன் என்ற மகாபாரதப் பாத்திரம் உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதை கண்முன் நிறுத்தினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அந்தப் படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.இந்தப் படத்தை தயாரித்து இயக்கிய பி ஆர் பந்துலுவுக்கு இந்த நூறாவது ஆண்டு வருடம் என்பதால், அவரை கவுரவிக்கும் வகையில், படத்தை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளனர், இதனை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தினர்.தொழில்நுட்ப ரீதியில் இன்றைக்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை 5.1 ஒலியமைப்புடனும், மேம்படத்தப்பட்ட தரத்துடனும் வெளியிடுகிறார்கள். அதே நேரம் ஒரிஜினல்தன்மை மாறாதவாறும் பார்த்துக் கொண்டுள்ளனர்.படத்தின் ட்ரெயிலரை வரும் பிப்ரவரி 21-ம் தேதி...
ரஜினியின் ஜோடி தீபிகா படுகோன் சென்னை வந்தார்!
Posted by NIsha
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோ. அவர் ஜோடியாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்டுக்காக தீபிகா படுகோன் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது. "படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். தனது தோற்றம் மாற்றப்படுவதற்கு தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். உடல் அசைவுகள் தெளிவாக வரவேண்டும் என்பதற்காக தீபிகாவை ஸ்கேன் செய்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முறையாக ‘பெர்பாமன்ஸ் கேப்சரிங்’ என்ற நவீன டெக்னாலஜி இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.மேலும் இதில் சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் மூன்று நிமிட காட்சி இடம்பெற இருக்கிறது. சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்க இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகள் ஷூட்டிங்கிற்காக படக்குழு லண்டன் செல்கிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online...
சூர்யாவை பின் தள்ளிய தனுஷ்!
Posted by NIsha
விளம்பரப்படமா, வேணாம்ப்பா என்று கட் அண்டு ரைட்டாக சொல்லி வருகிறவர் அஜீத் மட்டுமே. மற்றபடி கோடம்பாக்கத்தை பொருத்தவரை அடகுக்கடை விளம்பரத்திலிருந்து ஆணிக்கடை விளம்பரம் வரைக்கும் பேசி பேசியே துட்டு பார்த்து வருகிறார்கள் நம்ம ஊரு ராசாக்கள். லேட்டஸ்ட்டாக இந்த இன்ப குளத்தில் நீச்சலடித்து கோடிகளுக்கு குறி வைத்திருக்கிறார் தனுஷும். வேஷ்டி விளம்பரத்தில் நடிக்கணும் என்று சில கம்பெனிகள் அழைத்தபோதெல்லாம், ஏன்ப்பா... அது என் இடுப்புல நிக்கும்னு நம்பிக்கை வேற இருக்கா உங்களுக்கெல்லாம்? என்று கேட்டு வேஷ்டி கோஷ்டியை விரட்டியடித்தவர் தனுஷ். இதுபோல நாளொரு விளம்பரத்தையும் பொழுதொரு கோடியையும் அலட்சியப்படுத்திய தனுஷ், வெகுநாள் யோசனைக்கு பின் ஒரு எண்ணை விளம்பரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். வேடிக்கை என்னவென்றால் இந்த எண்ணை விளம்பரத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் சூர்யா. என்ன காரணத்தாலோ இதில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாம் அந்த நிறுவனம். கைக்கு வந்த கோடிகளை லவட்டிக் கொண்டாரே என்று லேசாக சீறுகிறதாம் சூர்யா.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema...
ஒரு கல் ஒரு கண்ணாடி - 26ம் தேதி இசை வெளியீடு!
Posted by NIsha
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. சந்தானம், ஹன்சிகா, சரண்யா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஆர்யா, சினேகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, ராஜேஷ் இயக்கி இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'எங்கேயும் காதல்' படத்தினை அடுத்து வெளிவர இருக்கும் முழுநீள காதல் கதை 'ஒரு கல் ஒரு கண்ணாடி'படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 26ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா மற்றும் பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் 3 நிமிட டிரெய்லர் மற்றும் பாடல்களை இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப தீர்மானித்து இருக்கிறார்கள்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
இரண்டாவது மனைவியா? – அனன்யா!
Posted by NIsha
சினிமாவில் கட்டிப் பிடித்து நடிக்கவே கலவரப்படுகிற அனன்யாவுக்கு கட்டிக்கப் போகிறவர் தந்த அதிர்ச்சி இருக்கிறதே… சென்ற வாரம் நடிகை அனன்யாவுக்கும் ஆஞ்சநேயன் என்ற தெழிலதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையைதான் கட்டிப்பேன் என்று கட்டுக்கோப்பாக இருந்த அனன்யாவுக்கு அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இவர்.நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் ஆஞ்நேயன் ஏற்கனவே ஒருவரை திருமதி ஆக்கியவர் என்று தெரிந்திருக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருக்கு இரண்டாவது மனைவியா என்று அனன்யாவும் அவரது குடும்பத்தாரும் அதிர்ந்து போயினர். உடனே தங்களை ஏமாற்றி நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் தந்தனர். போலீஸார் விசாரித்த போது, முதல் திருமணம் நடந்ததையும், முதல் மனைவியிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயிருப்பதையும் ஆஞ்சநேயன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.நாடறிந்த அனன்யாவையே இப்படி ஏமாற்றினார்கள் என்றால் சாமானிய பெண்களின் நிலை? நெஞ்சு முழுக்க சோகத்துடன் இருக்கிறார் அனன்யா.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
விஜய்க்கு சூப்பர் ஸ்டார் விருது!
Posted by NIsha
சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரில் இந்த ஆண்டு விஜய்க்கு விருது வழங்கியுள்ளனர்.எடிசன் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்கே, பேபி சாரா, கோவை சரளா, மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா, இனியா, லட்சுமிராய், லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துகுமாருக்கும், இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது.இந்த விருது விழாவில், விஜய் தன் படங்களில் ரஜினி பற்றிப் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிய காட்சிகளைக் காட்டினர். பின்னர் ரஜினி விருதினை அவருக்கு வழங்குவதாக அறிவித்தனர்.விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், ரசிகர்களை ஆஹா ஓஹோவெனப் பாராட்டினார். நண்பன் படத்திலிருந்து ஒரு பாட்டுப் பாடினார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
லிங்குசாமி தயாரிப்பில் தனுஷ்!
Posted by NIsha
இயக்குனர் லிங்குசாமி தனது அண்ணன் சுபாஷ்சந்திர போஸ் உடன் இணைந்து 'திருப்பதி பிரதர்ஸ்' பேனரில் படங்களை தயாரித்து வருகிறார்.இந்நிறுவனம் 'வழக்கு எண் 18/9 ', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவ்விரண்டு படங்களையும் யுடிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.மேலும், விஷால் நடிக்கும் அடுத்த படத்தினையும், 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.சரவணன் இயக்க இருக்கும் படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பார் என்று பேச்சுகள் நிலவின. ஆனால் இப்படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம் தனுஷ். இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
அரசியலுக்கு வரும் அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது - அஜீத்!
Posted by NIsha
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன. அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம். இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கிறேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன். எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது! என்று கூறியுள்ளார்Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News,...
சூர்யாவுடன் இணைந்து நடிப்பதில் பிரச்சினையில்லை - விஜய்
Posted by NIsha
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. விரைவில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன், என்றார் நடிகர் விஜய்.மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றிப் பேசினார்.பின்னர் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள ஷைன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார் விஜய். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.நண்பன் படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online...
ரஜினியின் 8 பேக்ஸ் கோச்சடையான்!
Posted by NIsha
கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான்.இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு.எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர்.கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
விஜய் நடிக்கும் துப்பாக்கி திடீர் நிறுத்தம்!
Posted by NIsha
நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
அஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார்!
Posted by NIsha
பில்லா-2 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வரும் வித்யூத் ஜம்வால், இப்போது துப்பாக்கி படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு புதிய வரவாக வந்திருப்பவர் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் இப்போது அஜித்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படம் தான். ஒரே நேரத்தில் அஜித், விஜய் என்று இருவரது படங்களில் மாறி மாறி நடித்து வரும் வித்யூத், அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷடக்காரன். அதனால் தான் ஒரே நேரத்தில் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ரொம்ப ஹாட்டான ஆளு, அதேசமயம் தான் செய்யும் எந்த வேலையிலும் முழு திருப்தி இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதேமாதிரி விஜய், ரொம்ப கூலான எனர்ஜிட்டிக் ஆளு. அதேசமயம்...
கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா?
Posted by NIsha
'விஸ்வரூபம்' படத்தினை அடுத்து கமல் நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.கமல் இயக்கி நடித்த 'தசாவதாரம்' படத்தினை தயாரித்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அடுத்து அவர் தயாரிக்க இருக்கும் படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.இரு மொழிகளில் வெளியாக இருக்கும் அப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கேத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.ரஜினியின் ' கோச்சடையான் ' படத்திற்காக தனது கால்ஷீட் தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க திட்டிமிட்டு வருகிறார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கேத்ரினா கைஃப்.இந்நிலையில் கமல் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணையும் படத்தில் நாயகி வேடத்திற்கும் கத்ரீனாவிடம் பேசி வருகிறார்கள். கேத்ரினா மட்டுமன்றி படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம்.ஆஸ்கர் ரவிச்சந்திரன் " எல்லாம் ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றன.. கேத்ரினாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எதுவும் இன்னும் முடிவாகவில்லை." என்று தெரிவித்துள்ளார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers,...
பகலவன் படத்தில் ஐ.பி.எஸ் ஆபிசராக நடிக்கிறார் விஜய்!
Posted by NIsha
சீமான் இயக்கும் பகலவன் படத்தில் ஐ.பி.எஸ் ஆபிசராக நடிக்கிறார் விஜய். தாணு தயாரிக்க இருக்கிறார்.டாக்டருக்கு படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை கிடைத்தும் அதற்குப் போகாமல் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு சேவை செய்யும் பாத்திரத்தில் நடிக்கிறார் விஜய். இங்கு உள்ள 20 கிராமங்களை தத்து எடுத்து மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிறார். அந்த 20 கிராமங்களை நம்பி மருத்துவமனை நடத்துபவர்களால் விஜய்க்கு பிரச்னை வருகிறது. கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவர் விஜய்யிடம் "அவங்கிட்ட எதுக்குபா உனக்கு வம்பு? பேசாம வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க பாருப்பா" என்கிறார். அதற்கு விஜய், வயலில் உள்ள நாற்றங்காலை காட்டி "இது என்ன ?" என்று கேட்கிறார். பெரியவர் "நாற்றங்கால்" என்கிறார். "இது எதற்கு பயன்படும் ?" " இது தரும் விதைநெல்லை தான் வயல் முழுவதும் விதைப்போம் " "சரி.. அப்படி என்றால் இந்த நிலம்.. ? " " இது எப்பொழுதும் தரிசாவே தான் இருக்கும்" என்கிறார் பெரியவர். "அதைப் போல் தான் இப்ப நம்ம நாடே இருக்கு. எல்லாரும் இங்கே படிச்சுட்டு வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கிறாங்க.. நம்ம நாடு எப்பவும் தரிசாவே...