tamil cinema news: Cinema News

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.கருத்தன் என்ற
மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர். இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருந்த அஜீத் குமாரின் பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்தியின் சகுனியும் ஜூன் 22ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டில் எந்த படத்தின் தேதி மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது பில்லா 2 அறிவித்தபடி 22ம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும், ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா 2 பெரிய பட்ஜெட்டில் அஜீத் குமாரை வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் வியாபாரம் அடியாகும் என்று தயாரிப்பு வட்டம் கருதியுள்ளது. இதையடுத்து தான் பில்லா 2வின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் பில்லா 2 அவருக்கு பிறந்தநாள் பரிசு போல் அமைந்துள்ளது என்று இரு நடிகர்களின் ரசிகர்களும் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் அஜீத்தின் படம் தள்ளிப்போயுள்ளது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.


இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இந்தப் படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதில் உறுதியான அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை. படம் சென்சாரான பிறகுதான் 'ரிலீஸ் தேதி அறிவிப்பு' என தயாரிப்பாளர் சொன்னாலும், பில்லா 2-வெளியாகும் அரங்குகளில் ஜூன் 21-ம் தேதிக்கு முன்பதிவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்த நிலையில் பில்லா 2 படம் நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துவிட்டார்களாம் சென்சார் உறுப்பினர்கள். மேலும் படத்தை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற வகையில் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு தாறு மாறாக கட் கொடுத்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். இன்றுதான் சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகுதான் மேற்கொண்டு என்ன செய்வது என்று அறிவிக்கவிருக்கிறோம். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை," என்றார். இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் தெரியாமல் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் குழப்பத்தில் உள்ளனர்.



Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
 த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது,

பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக்
காட்சியுடன் சில ஆக்ஷன் காட்சிகளும் திரையிடப்பட்டன. இதே விழாவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர். விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாஸன் நிருபர்களிடம் பேசியது: எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது.

ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மூலம் ஹாலிவுட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன். இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் 'மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்', 'கிரேட் கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
கார்த்தி நடிக்கும் சகுனி படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.சமீபத்திய படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படம் சகுனி. அஜீத்தின் பில்லா 2வுடன் மோதும் இந்தப் படத்தில் கார்த்தி - பிரனிதா நடித்துள்ளனர்.
அரசியல் - ஆக்ஷன் - நகைச்சுவை என கார்த்திக்கே உரிய ஜனரஞ்சகத் தன்மையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கார்த்தியின் அரசியல்வாதி கெட்டப் அவரது ரசிகர்களை உற்சாகத்துடன் 'தலைவா' கோஷத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் நேற்று பார்த்தனர். எந்த இடத்தில் கட் கொடுக்காமல், அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

ரூ 375 அரங்குகளில், வரும் ஜூன் 22-ம் தேதி, பெரிய அளவில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. 375 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கார்த்தி நடித்த படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். சகுனியின் தெலுங்குப் பதிப்பும் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக வெளியாகிறது!


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘தலைவன்’ எனப் பெயரிடப் பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் ‘தலைவன்’ படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏ.எல்.விஜய் முன்பு இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றும் பின்னர் தெய்வமகன் என்றும் பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக அவர் தெய்வத்திருமகள் என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டார்.

இந்த சென்டிமெண்ட் காரணமாக ‘தலைவன்’ படத்தின் தலைப்பையும் இவர் மாற்றுகிறார் என்று இயக்குனரின் நெருக்கமான தரப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.



Tags: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
சமந்தாவுக்கு தமிழில் அப்படி ஒரு மவுசு. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள் சமந்தா கால்ஷீட் இருந்தா நல்லாருக்குமே என்று கேட்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.இத்தனைக்கும் தமிழில் ஒரு படம் கூட பெரிதாக ஓடவில்லை.
இனி வெளியாகி ஓடினால்தான் உண்டு. தாறுமாறான அதிருஷ்டம் என்பது இதுதான் போலிருக்கிறது.இருக்கட்டும்... இப்போது அவர் கார்த்திக்கின் விருப்ப நாயகியாகியுள்ளார். கார்த்தி நடிக்கும் அடுத்த படமான பிரியாணியில் சமந்தா தான் ஜோடி.

வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவுக்கு சமமான வேடத்தில் நடிக்கிறார்.வழக்கம் போல யுவன் சங்கர் ராஜா இசையைக் கவனிக்க, சக்தி சரவணன் கேமிரா பிடிக்கிறார்.படத்தின் ஸ்க்ரிப்டுக்கு இறுதி வடிவம் கொடுக்க, சோனாவின் பார்ட்டியைக் கூட தியாகம் செய்துவிட்டு சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டனவாம். விரைவில் பூஜை அறிவிப்பு வரவிருக்கிறது!


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பில்லா 2 வரும் ஜூன் 22-ம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது. அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.அஜீத், பார்வதி
ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.

பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Tuesday, June 5, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் அண்ணாமலையை ரீமேக் செய்கிறார்கள் என்றும், அதில் விஜய் நடிக்கிறார் என்றும் செய்தி பரப்பியுள்ளனர்.1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பாவி பால்காரராக நடித்திருப்பார்.


அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். அவர்கள் கெமிஸ்ட்ரி அப்போது சூப்பர் ஹிட்டானது. தற்போது அண்ணாமலை படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. மேலும் அதில் ரஜினி ரோலில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறப்பட்டது. படத்தை எடுப்பவர்கள் குஷ்பு ரோலில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை நடிக்க வைக்க வலியுறுத்தினர் என்று செய்தி வெளியானது.

வேலாயுதம் படத்தின் மூலம் விஜய்-ஹன்சிகா ஜோடி வெற்றி ஜோடியாக ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

 Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Tuesday, May 29, 2012
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டு உள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் புதுமையாக இத்திரையரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப் பட உள்ளது.


தினமும் 30 காட்சிகள் திரையிடப்படும். 32 இருக்கைகள் உள்ளன. டிக்கெட் கட்டணம் ரூ.150. இந்த தியேட்டரின் இருக்கைகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீட்பெல்ட் அணிந்து கொண்டுதான் படத்தை பார்க்க முடியும். திரையில் என்ன காட்சிகள் வருகிறதோ அதற்கேற்ப தியேட்டர் சூழ்நிலை மாறும். உதாரணமாக மழை பெய்தால் படம் பார்ப்பவர்கள் இடி மின்னல், காற்று மழையை உணர முடியும். நெருப்பு, புகை தொடர்பான காட்சிகள் வந்தால் தியேட்டரில் வெப்பத்தையும் புகையையும் உணரலாம்.

இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு ரூ.1 1/2 கோடி செலவில் இந்த தியேட்டரை உருவாக்கி உள்ளனர். வெளிநாடுகளில் பிரபலமான இந்த பிக்ஸ் 5டி தியேட்டர் சென்னையில் துவங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

இந்த தியேட்டரை நடிகர் அருண்விஜய், இந்திய அழகியும் நடிகையுமான ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த தியேட்டரை அமைத்துள்ள ரவிசங்கர் தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் இத் தியேட்டரை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். 5D தொழிநுட்பம் எவ்வாறு செயற்படுகிறது தொடர்பான அறிவைப்பெற கீழுள்ள வீடியோவைப்பாருங்கள்.


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: , , | Monday, May 14, 2012
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: |

நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், இப்போது மீண்டும் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். சகுனி படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்திற்கு ஆளின்னால் அழகு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இப்படத்திற்கான கதையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் ராஜேஷ். இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து டைரக்டர் ராஜேஷ் கூறுகையில், எனது முந்தைய படங்களை ‌போன்று இந்தபடமும் காமெடி படமாக இருக்கும். தற்போது இப்படத்திற்கான கதை வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். இன்னும் ஹீரோயின் யார் என்று முடிவுசெய்யவில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அவர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்திருக்க‌ிறார். அதுமட்டும் அல்ல அவருக்கு இயல்பாகவே காமெடி நன்றாக வரும் எனவே அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். படத்தின் கதை வேலைகள் முடிந்தவுடன் இதுப்பற்றி காஜலிடம் பேசவுள்ளேன் என்று கூறியுள்ளார்.


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: |
தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நடிகர் விஜய். இன்னொருவர் இயக்குநர் ஏ எல் விஜய். இந்த இருவருமே இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து பணியாற்றியதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இப்போது ஒரு புதுப் படத்தில் இருவரும் இணைகிறார்கள்.

தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.விஜய் தற்போது துப்பாக்கியில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் பணியாற்றுகிறார்.

அடுத்தது விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வருகிறார். இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Thursday, May 10, 2012
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தி படத்தில், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வித்யூ வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜேஷ் மபுஸ்கர் இயக்கத்தில் சர்மான் ஜோஷி, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பெராரி கீ சவாரி. சிறுவன் ஒருவன் பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு காண்கிறான், அவனது கனவு நனவானதா.? அதற்கு அவரது அப்பா, தாத்தா போன்றவர்கள் எப்படி உதவினார்கள் என்பதே இப்படத்தின் கதை.  கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தி உருவாகும் படம் என்பதால் இப்படத்தில் சச்சினின் பெயர் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு சச்சினும் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்த அனுமதித்தது மட்டும் அல்லாமல் சிறப்பு தோற்றத்தில் தோன்ற சச்சின் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ.பி.எல்., போட்டி முடிந்தவுடன் சச்சின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சோப்ரா கூறியுள்ளதாவது, படத்தில் சச்சின் பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். அதுமட்டும் அல்ல படத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியும் இருக்கிறது. அதை நான் இப்போது கூற மாட்டேன். படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதாவது சச்சின் இப்படத்தில் நடிப்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் சோப்ரா. இப்படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Wednesday, May 9, 2012
அஜித் உடன் நடிப்பதாக இருந்தால் எனக்கு சம்பளமே வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி. வெப்பம், கழுகு படங்களில் நடித்திருப்பவர் நடிகை பிந்து மாதவி. ஆந்திராவில் பிறந்த பிந்து மாதவி படித்தது எல்லாமே சென்னையில் தான். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த அவர் பின்னர் படிப்படியாக சினிமாவுக்கு வந்தார்.


சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அதாவது தன்னுடைய சிறுவயது முதலே அஜித்தின் தீவிர ரசிகை
பிந்து மாதவி, அதனால் அடிக்கடி தன்னுடைய பேட்டிகளில் எப்படியாவது அஜி்த்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று கூறுவார். இப்போது ஒருபடி மேலேபோய், அஜித் கூட நடிப்பது என்றால் சம்பளமே வேண்டாம் என்கிறார்,

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Sunday, May 6, 2012
உலக நாயகன் கமலஹாசனின் 'விஸ்வரூபம்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1 அன்று வெளியிட்ட பட போஸ்டர்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நி¬லியல் கமலின் 'விஸ்வரூபம்' படத்தை பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

'மேட்‌ரிக்ஸ்', 'லார்ட் ஆஃப் தி ‌ரிங்ஸ்' போன்ற படங்களை தயாரித்த Barrie M Osborne, கமலின் 'விஸ்வரூபம்' படத்தின் சிறப்பு அம்சங்களை கேள்விப்பட்டதுடன், படத்தை பார்க்க வேண்டும் என்று கமல் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான மைக்கேல் வெஸ்டோர் மூலம் தெ‌ரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து விஸ்வரூபத்தை Barrie M Osborne-க்கு திரையிட்டு காட்டவே இந்தமுறை அமெ‌ரிக்கா சென்றிருக்கிறார் கமல். கமலின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Wednesday, May 2, 2012
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா. படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: |
சுந்தர் சி தற்போது எடுத்து வந்த காமெடி படமான கலகலப்பு படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.முன்னதாக மசாலா கபே என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் தற்போது கலகலப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் இசை கடந்த 20ம் தேதி வெளியானது. படத்தின் பாடல்கள் ஆங்காங்கே ஒலித்தவாறு இருப்பதில் இருந்தே பாடல்கள் ஹிட் ஆகிவிட்டன என்று நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை.வரும் , மே 11ம் தேதி கலகலப்பு படம் வெளியாவதற்கான அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 படத்திற்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்துள்ளதால் படக்குழுவினரின் உற்சாகம் இன்னும் அதிகரித்துள்ளது.கோடை விடுமுறையை குடும்பத்தோடு சினிமா தியேட்டரில் கொண்டாட வரும் குடும்பங்களுக்கு நிச்சயம் கலகலப்பு படம் ஒரு சிறந்த காமெடி பொழுதுபோக்கும் அம்சம் நிறைந்த படமாக இருக்கும் என்று உறுதியாக கூறுகின்றனர் படக்குழுவினர்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Friday, April 27, 2012
அறிமுக இயக்குனர் தங்கசாமி இயக்கியிருக்கும் ராட்டினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. கௌதம் வாசுதேவ மேனன் இசைத்தட்டை வெளியிட இயக்குனர் சேரன் பெற்றுக் கொண்டார். இயக்குனர்கள் கே.பாக்யரா‌ஜ், பிரபு சாலமன், சுசீந்திரன், பூ சசி என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ராட்டினம் படத்தை இரு தினங்கள் முன்பு கௌதம் உள்ளிட்ட இயக்குனர்களுக்கு இயக்குர் தங்கசாமி திரையிட்டுக் காட்டியிருந்தார். படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என உளப்பூர்வமாக கூறியிருந்தார் கௌதம். தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ராட்டினம் நினைவுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ராட்டினம் படப்பாடல்கள் இளைஞர்களின் விருப்பத்துக்கு‌ரிய ‌ரிங்டோனாக அமையும் என்றார் சேரன்.

மே மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் விநியோக உ‌ரிமையை வேந்தர் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Thursday, April 26, 2012