அண்ணாமலை ரீமேக்கி்ல் விஜய் - ஹன்சிகா?
Posted by NIsha
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் அண்ணாமலையை ரீமேக் செய்கிறார்கள் என்றும், அதில் விஜய் நடிக்கிறார் என்றும் செய்தி பரப்பியுள்ளனர்.1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பாவி பால்காரராக நடித்திருப்பார்.அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். அவர்கள் கெமிஸ்ட்ரி அப்போது சூப்பர் ஹிட்டானது. தற்போது அண்ணாமலை படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. மேலும் அதில் ரஜினி ரோலில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறப்பட்டது. படத்தை எடுப்பவர்கள் குஷ்பு ரோலில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை நடிக்க வைக்க வலியுறுத்தினர் என்று செய்தி வெளியானது.வேலாயுதம் படத்தின் மூலம் விஜய்-ஹன்சிகா ஜோடி வெற்றி ஜோடியாக ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
சென்னையில் முதன் முறையாக புதிய தொழிநுட்ப 5D தியேட்டர் (வீடியோ)
Posted by NIsha
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டு உள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் புதுமையாக இத்திரையரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப் பட உள்ளது.தினமும் 30 காட்சிகள் திரையிடப்படும். 32 இருக்கைகள் உள்ளன. டிக்கெட் கட்டணம் ரூ.150. இந்த தியேட்டரின் இருக்கைகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீட்பெல்ட் அணிந்து கொண்டுதான் படத்தை பார்க்க முடியும். திரையில் என்ன காட்சிகள் வருகிறதோ அதற்கேற்ப தியேட்டர் சூழ்நிலை மாறும். உதாரணமாக மழை பெய்தால் படம் பார்ப்பவர்கள் இடி மின்னல், காற்று மழையை உணர முடியும். நெருப்பு, புகை தொடர்பான காட்சிகள் வந்தால் தியேட்டரில் வெப்பத்தையும் புகையையும் உணரலாம். இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு ரூ.1 1/2 கோடி செலவில் இந்த தியேட்டரை உருவாக்கி உள்ளனர். வெளிநாடுகளில் பிரபலமான இந்த பிக்ஸ் 5டி தியேட்டர் சென்னையில் துவங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. இந்த தியேட்டரை...
துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் சரத் குமார் - முருகதாஸ் தகவல்!
Posted by NIsha
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema...
கார்த்தி,காஜல் அகர்வால் இயக்கும் ராஜேஷ்!
Posted by NIsha
நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், இப்போது மீண்டும் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். சகுனி படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்திற்கு ஆளின்னால் அழகு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இப்படத்திற்கான கதையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் ராஜேஷ். இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து டைரக்டர் ராஜேஷ் கூறுகையில், எனது முந்தைய படங்களை போன்று இந்தபடமும் காமெடி படமாக இருக்கும். தற்போது இப்படத்திற்கான கதை வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். இன்னும் ஹீரோயின் யார் என்று முடிவுசெய்யவில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அவர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டும் அல்ல அவருக்கு இயல்பாகவே காமெடி நன்றாக வரும் எனவே அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். படத்தின் கதை வேலைகள்...
விஜய் இயக்க, விஜய் நடிக்கும் தலைவன்!
Posted by NIsha
தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நடிகர் விஜய். இன்னொருவர் இயக்குநர் ஏ எல் விஜய். இந்த இருவருமே இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து பணியாற்றியதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இப்போது ஒரு புதுப் படத்தில் இருவரும் இணைகிறார்கள்.தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.விஜய் தற்போது துப்பாக்கியில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் பணியாற்றுகிறார்.அடுத்தது விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வருகிறார். இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கும் சச்சின்!
Posted by NIsha
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தி படத்தில், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வித்யூ வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜேஷ் மபுஸ்கர் இயக்கத்தில் சர்மான் ஜோஷி, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பெராரி கீ சவாரி. சிறுவன் ஒருவன் பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு காண்கிறான், அவனது கனவு நனவானதா.? அதற்கு அவரது அப்பா, தாத்தா போன்றவர்கள் எப்படி உதவினார்கள் என்பதே இப்படத்தின் கதை. கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தி உருவாகும் படம் என்பதால் இப்படத்தில் சச்சினின் பெயர் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு சச்சினும் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் படத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்த அனுமதித்தது மட்டும் அல்லாமல் சிறப்பு தோற்றத்தில் தோன்ற சச்சின் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ.பி.எல்., போட்டி முடிந்தவுடன் சச்சின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சோப்ரா கூறியுள்ளதாவது, படத்தில் சச்சின் பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். அதுமட்டும் அல்ல படத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியும் இருக்கிறது....
அஜித் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம் - பிந்து மாதவி!
Posted by NIsha
அஜித் உடன் நடிப்பதாக இருந்தால் எனக்கு சம்பளமே வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி. வெப்பம், கழுகு படங்களில் நடித்திருப்பவர் நடிகை பிந்து மாதவி. ஆந்திராவில் பிறந்த பிந்து மாதவி படித்தது எல்லாமே சென்னையில் தான். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த அவர் பின்னர் படிப்படியாக சினிமாவுக்கு வந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அதாவது தன்னுடைய சிறுவயது முதலே அஜித்தின் தீவிர ரசிகை பிந்து மாதவி, அதனால் அடிக்கடி தன்னுடைய பேட்டிகளில் எப்படியாவது அஜி்த்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று கூறுவார். இப்போது ஒருபடி மேலேபோய், அஜித் கூட நடிப்பது என்றால் சம்பளமே வேண்டாம் என்கிறார்,Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
ஹாலிவுட்டில் கமலின் விஸ்வரூபம்?
Posted by NIsha
உலக நாயகன் கமலஹாசனின் 'விஸ்வரூபம்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1 அன்று வெளியிட்ட பட போஸ்டர்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நி¬லியல் கமலின் 'விஸ்வரூபம்' படத்தை பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். 'மேட்ரிக்ஸ்', 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' போன்ற படங்களை தயாரித்த Barrie M Osborne, கமலின் 'விஸ்வரூபம்' படத்தின் சிறப்பு அம்சங்களை கேள்விப்பட்டதுடன், படத்தை பார்க்க வேண்டும் என்று கமல் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான மைக்கேல் வெஸ்டோர் மூலம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து விஸ்வரூபத்தை Barrie M Osborne-க்கு திரையிட்டு காட்டவே இந்தமுறை அமெரிக்கா சென்றிருக்கிறார் கமல். கமலின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
ஹிந்தியில் அக்ஷ்ய் குமார் படத்தில் விஜயின் அட்டகாசமான ஆட்டம்!
Posted by NIsha
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம். சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா. படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார். இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர். இந்த டான்ஸ் காட்சியைப்...