tamil cinema news: March 2012

Latest Stories

26 Sep 2013

Actress Sri Divya Latest Unseen Image Gallery

Actress Sri Divya Latest Unseen Images, Actress Sri Divya Latest Unseen photos, Actress Sri Divya Latest Unseen gallery, Actress Sri Divya Latest Unseen Hot images, Actress Sri Divya photos, Actress ...

    See More News

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

News

News

ஏப்ரல் 13ம் தேதி துப்பாக்கி படத்தின் முதல் தோட்டா!

Posted by NIsha

விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்போது என்பது தான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது. சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன். பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏப்ரல் 13ம் தேதி படத்தின் FIRST LOOK வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, March 29, 2012

முருகதாஸ் 7 ஆம் அறிவில் கோட்டைவிட்டதை துப்பாக்கியில் ச‌ரி செய்வார் - சந்தோஷ் சிவன்!

Posted by NIsha

ஊரெல்லாம் ஸ்டிரைக்கில் இருக்கையில் விஜய்யின் துப்பாக்கி ஷூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது என்று கேயார் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதில் சொல்லப்படவில்லை. சென்ற வாரம் துப்பாக்கியின் பாடல் ஒன்றை எந்தத் தடையும் இன்றி படமாக்கினார்கள். விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு நடனக் கலைஞர் ஷோபி நடனம் அமைத்திருந்தார். பாடலுக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்.சர்வதேச அளவில் புகழ்பெற்ற சந்தோஷ்சிவன் விஜய் நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல்முறை. இது குறித்து மகிழ்ச்சியை இணையத்தில் பகிர்ந்து கொண்டிருப்பவர், படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் உண்மையான லொகேஷனில் படமாக்கியிருப்பதாக‌த் தெ‌ரிவித்துள்ளார். விஜய் மும்பையில் நல உதவி வழங்கிய விழாவில் ரசிகர்கள் முண்டியடித்து தடியடி ப‌ரிசாக பெற்றார்கள். அப்படியிருக்க விஜய்யை வைத்து மும்பையின் முக்கிய பகுதிகளில் எப்படி படப்பிடிப்பு நடத்தினார்கள்?ஷூட்டிங்கிற்கான எந்த பாதுகா‌ப்பு‌ம் இல்லாமல் கேமராவை மறைத்து வைத்து காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியதாக சந்தோஷ்சிவன் தெ‌ரிவித்துள்ளார். முருகதாஸ் 7 ஆம் அறிவில் கோட்டைவிட்டதை துப்பாக்கியில் ச‌ரி செய்வார் என்பதே அனைவ‌ரின் எதிர்பார்ப்பாக உள்ளது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest...

Posted in: | Wednesday, March 28, 2012

அமலா பால் மீது இருந்த கிரேஸ் போய்விட்டதாக ஹீரோக்கள் தகவல்! நிஜம் என்ன?

Posted by NIsha

காதலில் சொதப்புவது எப்படி?! முப்பொழுதும் உன் கற்பனைகள் என ஒரே நாளில் அமலாபால் நடித்து இரண்டு தமிழ் படங்கள் வெளிவந்து ஒன்று ஹிட்டு! மற்றொன்று பூட்டு!! எனும் அளவிற்கு இருந்த நாள் முதல் அமலா பால் மீது தமிழ் ரசிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு போய்விட்டதா? இல்லை தமிழ் சினிமாக்காரர்களுக்கு இருந்த ஈர்ப்பு போய் விட்டதா? தெரியவில்லை! சமீபத்தில் அமலாவை லட்சக்கணக்கில் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்த பிரபல பட நிறுவனம் ஒன்றும், பிரபல இயக்குநர் ஒருவரும் கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிவிட்டு அமலாவை வேண்டாம் என்று விட்டனராம்! தமிழ் முன்னணி ஹீரோக்களுக்கும் அமலா மீது இருந்த கிரேஸ் போய்விட்டதாக ஒரு தகவல்! நிஜம் என்ன அமலா?Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஜெ! பிரதமருக்கு கடிதம்

Posted by NIsha

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ராமர் பாலம் தொடர்பாக மாநில அரசும் தனது நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை வியாழக்கிழமை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்தால், நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.இதுதொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரம்:'சேது சமுத்திர திட்டம் தொடர்பான ஆய்வை முடிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் அதிக காலம் ஆகிறது...

Posted in: , |

வாழும் நீல மனிதன்! கிருஸ்ணரின் அவதாரமா? - வீடியோ இணைப்பு

Posted by NIsha

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள், மேலதிக உண்மையான தகவல்களுடன் தருகின்றோம்.1960 ஆம் ஆண்டளவில் Kentucky  எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிறத்தைக்கொடுக்கின்றது. அவ் மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற்பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான மனிதர்கள் தோன்றக்காரணம். சாதாரணமாக இப்படியான பிரச்சனை எவராவது ஒருவருக்கு வருவதுண்டு. ஆனால் இவர்களைப்பொறுத்தவரை சற்றுவித்தியாசமாக இந்த ஜீன் மாற்றம் அவர்களின் வம்சத்தை தொடர்கிறது. ( இன்றுவரை அவர்களின் வம்சத்தில் பிறந்த ஒருவருக்கேனும் இவ் நீலத்தோல் இருக்கின்றதாம். )தோல் நீல நிறமாக இருக்கின்றபோதிலும் இவர்களிற்கு எவ்விதமான நோய்களோ உடல் பலவீனங்களோ இல்லை. சாதாரண நம்மைப்போன்றே இவர்களும் வாழ்கிறார்கள். ஒருபடி மேலே சொல்லவேண்டும் எனின் 80 வயதுவரை வாழ்கிறாரகள்.கிருஸ்ணரும் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்குமோ??? :)Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers....

Posted in: , | Tuesday, March 27, 2012

அஜித்தின் பில்லா ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீஸ் ஆகிறது!

Posted by NIsha

ரிலீஸ் அளவுக்கு "ரீ ரிலீசும்" இப்போது பிரபலமாகி வருகிறது. சரியான சூழலில் வெளியாகவில்லை, அது இது என 1008 காரணம் சொல்லி படத்தை ரீரிலீஸ் செய்யும் டெக்னிக் தற்போது தமிழ் சினிமாவில் தொற்றிக் கொண்டுள்ளது.இதற்கு பழைய படங்கள் கூட விதிவிலக்கு இல்லை, அண்மையில் சிவாஜியின் கர்ணன், எம்.ஜி.ஆரின்., குடியிருந்த கோயில் ஆகிய படங்கள் கூட ரீரிலீஸ் செய்யப்பட்டன. ரஜினி நடிப்பில் வெளியான பில்லா 2007-ம் வருடம் தமிழில் ரீமேக் செய்தனர்.அதில் அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்தனர். இப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இதையடுத்து, இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் வற்புறுத்தினர்கள் என்ற போர்வையில் பில்லா படத்தை மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக கோடம்பாக்க பட்சி கூறுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

கோடம்பாக்கத்தை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஹன்சிகா!

Posted by NIsha

நடிக்க வந்த கொஞ்ச நாட்களில் பதினைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டாராம் ஹன்சிகா மோத்வானி. இந்த எண்ணிக்கை தமிழ் படங்களுடன் மற்ற மொழி படங்களையும் சேர்த்துதான். சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவது. சின்ன சின்ன சிரமங்களையும் பொறுத்துக் கொள்வது என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் தனது பொறுமையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஹன்சிகாவின் இன்னொரு குவாலிடி படம் தொடர்பான எல்லா ஃபங்ஷன்களுக்கும் வந்து விடுவதுதான். தனது படத்தின் துவக்க விழாவுக்கு வருவதற்கோ, ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு அநியாயத்துக்கு பிலிம் காட்டும் நடிகைகளும் இங்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் ஹன்சிகாவின் இந்த குட் குவாலிடிஸ் கோடம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் பிரஸ்மீட்டில் அலட்டோ அலட்டென்று அமலாபால் அலட்டியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவரையெல்லாம் ஒப்பிடும்போது ஹன்சிகா கிரேட் என்கிறார்கள். தமிழே தெரியாவிட்டாலும் தெரிந்ததை போல அவர் சமாளிப்பதுதான் இன்னும் கவர்ச்சி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஒருவேளை இதுதான் பேச்சுலர் கவர்ச்சியோ என்னவோ?Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema...

Posted in: | Sunday, March 25, 2012

மும்பையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

Posted by NIsha

மும்பையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட விழாவில், பயங்கர ரகளையாகிவிட்டது. ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.மும்பை மாநகர விஜய் நற்பணி இயக்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலை விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மும்பை அண்டாப்ஹில்லில் நேற்று நடந்தது.விழாவில் இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் வரிசையாக அமர்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் மேடையில் தோன்றினார். அப்போது மேடையில் நடந்தவாறு அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். விஜயை பார்த்து பேசிவிடவேண்டும் என்று துடித்த ரசிகர்கள் விஜயின் கால் மற்றும் கையை பிடித்து இழுத்தவாறு இடையூறு செய்யத் தொடங்கினர்.ரசிகர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மேடையை நோக்கிச் சென்றனர். இதனால் கூட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் விழா மேடை அருகே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர்.கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள் நொறுங்கின. நாற்காலிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. அந்த மைதானமே போர்க்களம் போல காட்சியளித்தது. விழாவில் நலிவடைந்தோர்களுக்கு தையல்...

Posted in: |

ஜாக்கி சான், சல்மான் கான்.. கூட விஜய், அஜித், சூர்யா யார்!

Posted by NIsha

கமல், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுத்து பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.ஜாக்கி சான் படங்களை தமிழில் டப்பிங் செய்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் ஜாக்கிசான் இவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவரது தயாரிப்பில் கமல் நடித்த ' தசாவதாரம் ' படத்தின் இசையை ஜாக்கிசான் வெளியிட்டார்.ஜாக்கி சான் நடிக்கும் படம் ஒன்றிணை தயாரிக்க வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரவிச்சந்திரன்.ஜாக்கி சான் நடித்த ARMOUR OF GOD படத்தின் அடுத்த பாகத்தினை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறாராம். படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி. இப்படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.அந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர், இந்தி சினிமாவின் முன்னணி நாயகர்,  என படத்துக்கு பலம் சேர்க்க திட்டம் இருக்கிறதாம். இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்து வெளியிட்டு, இந்தியாவில் கலெக்ஷனைக் கூட்ட இது உதவும்.இதற்காக சல்மான்கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். ஜாக்கி சானுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் சல்மான்கான்...

Posted in: | Friday, March 23, 2012

அஜித்தின் பில்லா 2 மே 25ல் ரிலீஸ் ?

Posted by NIsha

அஜீத்தின் அடுத்த அதிரடியான 'பில்லா 2' தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 'பில்லா 2' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இப்போதைக்கு கேள்விக்குறியுடன்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஸ்டிரைக் ஸ்பீடு பிரேக்கர் போட்டதால் நினைத்தபடி படத்தை முடிக்க முடியவில்லையாம் பில்லா டீமால். தல யின் பிறந்த நாளுக்கு பில்லா வராது என்பது உறுதி. இவையெல்லாம் மே ஒன்றில் சாத்தியமில்லை என்பதால் மே 25 க்கு படத்தை தள்ளி வைத்திருப்பதாக புதிய செய்தி உலவுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, March 22, 2012

ஹிந்தி துப்பாக்கி ரீமேக்கில் அக்சய்குமார்!

Posted by NIsha

பொதுவாக ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் அதன் ரீமேக் பற்றி பேசப்படும். ஆனால், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் துப்பாக்கிப் படம் வெளியாவதற்கு முன்பே, ஹிந்தி ரீமேக் பற்றி பேச ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம்.இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக துப்பாக்கி இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். தற்போது வரை துப்பாக்கி ரீமேக் உரிமையை முருகதாஸே வைத்துள்ளார். அவரே ஹிந்தியில் துப்பாக்கிப் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் கூறினார். புதிய செய்தி என்னவென்றால் இப்படத்தில் அக்சய் குமார் நடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.துப்பாக்கிப் படம் திரைக்கு வந்த பிறகுதான், ஹிந்தி படப்பிடிப்பிற்கான பணிகள் துவங்க உள்ளன. தற்போது நடித்து வரும் படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டு முருகதாஸுடன் இணைய உள்ளார் அக்சய் குமார்.   Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Wednesday, March 14, 2012

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்!

Posted by NIsha

மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள சிர்ட்6′ (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர். எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது.இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர். அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ஆசிரமத்தை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் - அமலா பால்!

Posted by NIsha

கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால்.இந்த ஆசிரமத்துக்குப் போய் வந்த பிறகு அந்த அனுபவம் குறித்துதான் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த இடமும் சுற்றுப் புறமும் என் மனதை விட்டு நீங்க வில்லை. அந்த இடத்தை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசிரமத்துக்குப் போவேன்," என்றார்.  Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் ப்ளீஸ் விஜய் வேண்டுகோள்!

Posted by NIsha

அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நண்பன் படத்தை முடித்த கையோடு துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன், ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் துப்பாக்கி படத்தின் சூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் வார நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விஜய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஷங்கர் மற்றும் முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்பநாள் ஆசை. அது இப்போது தான் நிறைவேறி இருக்கிறது. ஷங்கர் சாருடன் ஒர்க் பண்ணியது ஒரு வித அனுபவம். அதேபோல் முருகதாஸின் படம் எடுக்கும் பாணி ஒருவிதம். இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மக்கள் இயக்கம் குறித்து கூறுகையில், இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை தென் மாவட்டங்களில் உள்ளவர்களை ரெகுலரா சந்தித்து பேசி வருகிறேன். மக்களுக்கான நற்பணிகளை மக்கள் இயக்க சகோதரர்கள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட எங்கள் இயக்கத்தினர் தானே புயலுக்கு உதவி செய்தது...

Posted in: | Tuesday, March 13, 2012

பில்லா 2 சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது!

Posted by NIsha

அஜித்தின் பில்லா 2 படத்தின் சேட்டிலைட் உரிமையை  சன் டிவி நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது. டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.  இப்படத்துக்கான உள் நாட்டு உரிமையை சன் டிவி கைப்பற்றியது, வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, March 12, 2012

அஜித்தை இயக்கும் பிரபுதேவா!

Posted by NIsha

மங்காத்தா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் மவுசு மேலும் கூடியிருக்கிறது. இதனால் அவரை வைத்து படம் இயக்க டைரக்டர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியில் நடிகர் சைப் அலிகான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான ரேஸ் படத்தை, தமிழில் அஜித்தை வைத்து ரீ-மேக் செய்ய பிரபல மும்பை பட நிறுவனம் ஒன்று முயற்சித்து வருகிறது. இப்போது இந்தபடத்தை யார் இயக்குவது என்பது போட்டி. தற்போது அஜித் பில்லா-2வில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர சமீபத்தில் வெங்கட் பிரபு மீண்டும் அஜித்துடன் கூட்டணி சேர இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இதனிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Sunday, March 11, 2012

விஜய்க்கு உருவாக்கப்பட்ட கதையில் அஜ்மல்!

Posted by NIsha

விஜய்க்கு உருவாக்கப்பட்ட ஒரு கதையில் இப்போது ஹீரோவாக நடிக்கிறார் இளம் நடிகர் அச்மல்.இயக்குநர் ருத்ரன் இயக்கும் படம் வெற்றி செல்வன். இப்படத்தின் கதையை விஜய்க்காகவே உருவாக்கினாராம் ருத்ரன். கதை கேட்டு தனக்குப் பிடித்திருப்பதாக சொன்ன விஜய்யால், பல்வேறு காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.அஜ்மலுக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தோனி படத்தில் நாயகியாக நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றவர். மதன் கார்கி பாடல்கள் எழுத இசையமைக்கிறார் மணி ஷர்மா.இப்படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் ரணம். பின்னர் சத்யவான் என்று மாற்றப்பட்டது. இப்போது அதுவும் மாறி 'வெற்றி செல்வன்' ஆகியிருக்கிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Friday, March 9, 2012

சினிமாவில் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன்- சூர்யா!

Posted by NIsha

 நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார். விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம்,...

Posted in: | Tuesday, March 6, 2012

சர்வதேச 5 விருதுகளை அள்ளிய அஜித்தின் மங்காத்தா!

Posted by NIsha

சிங்கப்பூரில் சமீபத்தில் சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படமும் இடம்பெற்றது. சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மங்காத்தா படத்திற்கு, சிறந்த இயக்குனர் விருது, சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, சிறந்த பாடகி விருது, சிறந்த துணை நடிகர் விருது ஆகிய 5 விருதுகளும் வழங்கப்பட்டது.இந்த விழாவில் இசையமைப்பாளரும், டைரக்டருமான கங்கை அமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் வானம் படத்திற்காக சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரௌத்திரம் படத்திற்காக ஸ்ரேயாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வளர்ந்து வரும் நடிகருக்கான விருது எங்கேயும், எப்போதும் படத்துக்காக ஜெய்க்கு கிடைத்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரேயா, ஹன்சிகா மோத்வானி, சந்தியா, மேக்னா நாயுடு உள்ளிட்டோரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, March 5, 2012

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ரஜினி!

Posted by NIsha

ரஜினி உடல்நிலை சரியான பிறகு நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார்,ஷோபனா, நாசர், ருக்மணி, ஆதி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.MOTION CAPTURE TECHNOLOGY மூலம் இந்தியாவில் உருவாக இருக்கும் முதல் படம் ' கோச்சடையான் '. இதற்காக ஹாங்காங் சென்று MOTION CAPTURE TECHNOLOGYயில் புகழ்பெற்ற பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களை சந்தித்து பேசிவிட்டு திரும்பி இருக்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்.லண்டனில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதையொட்டி அதற்கான பணிகள் லண்டனில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோச்சடையான் படமே இன்னும் தொடங்கப்படாத நிலையில் அடுத்த படத்திற்கான கதையை இயக்குனர் ஒருவரிடம் கேட்டு தயார் செய்து விட்டாராம் ரஜினி.ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தில், 'ராணா’ படத்துக்காக அறிவிக்கப்பட்ட அத்தனை டெக்னீஷியன்களும் இடம் பெறுகிறார்கள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் மிஸ்ஸிங். வித்தியாசமான அதிரடி ஆக்ஷன் படத்தில் ரஜினியை இயக்கப்போவது... கே.வி.ஆனந்த்!Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News,...

Posted in: | Sunday, March 4, 2012

ஜெயம்ரவிக்கு ஜோடியாகும் நயன்தாரா!

Posted by NIsha

சினிமாவில் இருந்து விலகியிருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்ற விஷயமே தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது, மேலும் அவர் ஜெயம் ரவியுடன் முதன் முறையாக ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.சமுத்ரக்கனி அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜெயம் ரவி நடிப்பது என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.சமுத்ரக்கனி தற்போது கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்ததும், அடுத்தது ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். ஜெயம் ரவி நடித்து வரும் ஆதிபகவன் படம் விரைவில் பெரிய திரைக்கு வர உள்ளது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Friday, March 2, 2012