tamil cinema news: K.V. Anand Next Flim

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

Recently Comments


News

News

சமீபத்தில் ஜீவா, கார்த்திகா, பியா மற்றும் அஜ்மல் நடித்து வெளிவந்த படம் 'கோ'. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார். R.S. Infotainment இப்படத்தை தயாரித்து இருந்தாலும் இப்படத்தை வாங்கி வெளியிட்டவர் உதயநிதி ஸ்டாலின். இப்படம் தமிழ் திரையுலகில் வரவேற்பை பெற்றுள்ளது.

கே.வி.ஆனந்தும், உதயநிதி ஸ்டாலினும் பல மாதங்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். உதயநிதி தான் தயாரித்து சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தின் இறுதியில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். அதன் பிறகு, உதயநிதி ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட போது அவரிடம் பல திரைப்பட இயக்குனர்கள் கதை சொல்லி வந்தனர். தரணி, 'பசங்க' பாண்டிராஜ், கே.எஸ்.ரவிக்குமார் என அந்த இயக்குனர்கள் பட்டியல் மிகவும் நீளம்.

சூர்யாவை வைத்து 'மாற்றான்' படத்தை இயக்க இருக்கிறார் கே.வி.ஆனந்த். அதற்குப் பிறகு அவர் இயக்கும் படத்துக்கு நாயகன் உதயநிதி தான்.

உதயநிதிக்கு ஏற்றார் போல் ஒரு கதை தயார் செய்யும்படி எழுத்தாளர்கள் சுபாவிடன் கே.வி.ஆனந்த் கூறியிருப்பதாகவும் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
Posted in: , | Wednesday, May 4, 2011