tamil cinema news: Trisha Pair With Udhayanidhi Stalin

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

Recently Comments


News

News

நண்பேன்டா' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின், அடுத்து புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'நண்பேன்டா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிப் படம் தந்த ராஜேஷ்.எம் இயக்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி யார் என்பதில் பலரது பெயர்கள் அடிபட்டன. முதலில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியாயின. அதன் பின் 'களவாணி' படத்தில் கலக்கிய ஓவியா நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் இப்போது, உதயநிதியின் ஜோடியாக த்ரிஷா முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இயக்குநர் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உதயநிதி தயாரித்த 'குருவி', 'மன்மதன் அம்பு' படங்களில் நாயகியாக நடித்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. வெல்வெட் மெத்தையில பட்டுத் தலையணை!
Posted in: , , | Monday, January 3, 2011