தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று பல்வேறு பட தலைப்புக்கு பின்னர் இறுதியாக தெய்வத்திருமகள் என்று மாறியிருக்கும் விக்ரம் படம், ஜூன் 3ம் தேதி ரிலீசாக இருந்தது இப்போது தள்ளிபோகிறது.
மதராசபட்டினம் படத்திற்கு பிறகு விக்ரமை வைத்து விஜய் இயக்கி இருக்கும் படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரம் வித்யாசமாக மனநலம் குன்றிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் அனுஷ்கா மற்றொருவர் அமலா பால். இவர்கள் தவிர சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகவும் வித்யாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஆரம்பத்தில் தெய்வமகன், பிதா என்று தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் அப்படத்தின் தலைப்பை வேறு சிலர் பதிந்து வைத்திருக்க அப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு தெய்வத்திருமகன் என்று மாற்றப்பட்டது. படத்தின் ஆடியோ ரிலீஸ் எல்லாம் சிறப்பாக நடந்தது.
இந்நிலையில் தெய்வத்திருமகன் என்ற பெயருக்கு தேவர் அமைப்பை சேர்ந்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த தலைப்பும் மாற்றப்பட்டு கடைசியாக தெய்வத்திருமகள் என்று மாற்றப்பட்டது. இப்படி தொடர்ந்து படதலைப்பில் ஏற்பட்ட பிரச்சனை உள்ளிட்ட சில பல காரணங்களால், ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாக இருந்த தெய்வத்திருமகள் படம் ஜூன் 17ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.
Posted in:
anushka,
Deiva Thirumagal Release,
Deiva Thirumagal Release Date,
Vikram Deiva Thirumagal
| Friday, May 27, 2011



