
அதன்பின்பு நடித்த குசேலன் படத்திலும் வடிவேலும் இருக்கும் படி பார்த்து கொண்டார். எந்திரன் படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. ஆனால் வடிவேலுவை எங்கு பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி அன்போடு பேசி நலம் விசாரித்து வந்தார் ரஜினி.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வடிவேலுவின் அணுகுமுறையால் பெரும் அதிர்ச்சியுற்றார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் 'ரானா'. இப்படத்தில் வடிவேலு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ரஜினி.
வடிவேலு இடத்தை இப்பொழுது பிடித்து இருப்பது கஞ்சா கருப்பு. 'எல்லாம் என் பையன் பொறந்த ராசிதான்' என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் கஞ்சா கருப்பு.
0 comments for "Rajinikanth Reject Vadivelu!"