மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஜய்?
Posted by NIsha
மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.கருத்தன் என்ற மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர். இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News,...
சகுனியால் பின் வாங்கிய பில்லா 2
Posted by NIsha
வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருந்த அஜீத் குமாரின் பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்தியின் சகுனியும் ஜூன் 22ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டில் எந்த படத்தின் தேதி மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது பில்லா 2 அறிவித்தபடி 22ம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும், ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா 2 பெரிய பட்ஜெட்டில் அஜீத் குமாரை வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் வியாபாரம் அடியாகும் என்று தயாரிப்பு வட்டம் கருதியுள்ளது. இதையடுத்து தான் பில்லா 2வின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் பில்லா 2 அவருக்கு பிறந்தநாள் பரிசு போல் அமைந்துள்ளது என்று இரு நடிகர்களின் ரசிகர்களும் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில்...
பில்லா 2 ஜுன் 22-ல் ரிலீஸ் ஆகுமா? - அதிருப்தியில் தயாரிப்பாளர்!
Posted by NIsha
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார். இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இந்தப் படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதில் உறுதியான அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை. படம் சென்சாரான பிறகுதான் 'ரிலீஸ் தேதி அறிவிப்பு' என தயாரிப்பாளர் சொன்னாலும், பில்லா 2-வெளியாகும் அரங்குகளில் ஜூன் 21-ம் தேதிக்கு முன்பதிவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்த நிலையில் பில்லா 2 படம் நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துவிட்டார்களாம் சென்சார் உறுப்பினர்கள். மேலும் படத்தை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற வகையில் ஏ சான்றிதழ்...
பூலோகம் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக த்ரிஷா!
Posted by NIsha
த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது, பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema...
ஹாலிவுட்டில் களமிறங்குகிறேன் - கமல்!
Posted by NIsha
ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில ஆக்ஷன் காட்சிகளும் திரையிடப்பட்டன. இதே விழாவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர். விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாஸன் நிருபர்களிடம் பேசியது: எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மூலம் ஹாலிவுட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன். இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் 'மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்', 'கிரேட் கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு...
பில்லா 2 போட்டியாக ரிலீஸ்யாகும் சகுனி!
Posted by NIsha
கார்த்தி நடிக்கும் சகுனி படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.சமீபத்திய படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படம் சகுனி. அஜீத்தின் பில்லா 2வுடன் மோதும் இந்தப் படத்தில் கார்த்தி - பிரனிதா நடித்துள்ளனர். அரசியல் - ஆக்ஷன் - நகைச்சுவை என கார்த்திக்கே உரிய ஜனரஞ்சகத் தன்மையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கார்த்தியின் அரசியல்வாதி கெட்டப் அவரது ரசிகர்களை உற்சாகத்துடன் 'தலைவா' கோஷத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் நேற்று பார்த்தனர். எந்த இடத்தில் கட் கொடுக்காமல், அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர். ரூ 375 அரங்குகளில், வரும் ஜூன் 22-ம் தேதி, பெரிய அளவில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. 375 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கார்த்தி நடித்த படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். சகுனியின் தெலுங்குப் பதிப்பும் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக வெளியாகிறது!Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema...
கதைக்கும் தலைப்புக்கும் பொருத்தமில்லாத படம் தலைவன் - விஜய்
Posted by NIsha
இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘தலைவன்’ எனப் பெயரிடப் பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் ‘தலைவன்’ படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.எல்.விஜய் முன்பு இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றும் பின்னர் தெய்வமகன் என்றும் பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக அவர் தெய்வத்திருமகள் என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டார். இந்த சென்டிமெண்ட் காரணமாக ‘தலைவன்’ படத்தின் தலைப்பையும் இவர் மாற்றுகிறார் என்று இயக்குனரின் நெருக்கமான தரப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.Tags: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
Viswaroopam Kamal New onsite photos - Tamil Cinema Bazaar
Posted by NIsha
Viswaroopam Kamal Photo-1Read more » ...
Simbu Vaalu Movie Trailer - Tamil Cinema Bazaar
Posted by NIsha
Click the Image to PlaySimbu's Vaalu Movie Trailer - Tamil Cinema Bazaar ...
Simbu's Vaalu Movie Posters Wallpapers 2012
Posted by NIsha
Simbu's Vaalu Movie Poster and Wallpapers - 1Read more » ...
Kamal Hassan Viswaroopam Posters & Stills
Posted by NIsha
Kamal Hassan Viswaroopam Posters & Stills - 1Read more » ...
கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா!
Posted by NIsha
சமந்தாவுக்கு தமிழில் அப்படி ஒரு மவுசு. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள் சமந்தா கால்ஷீட் இருந்தா நல்லாருக்குமே என்று கேட்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.இத்தனைக்கும் தமிழில் ஒரு படம் கூட பெரிதாக ஓடவில்லை. இனி வெளியாகி ஓடினால்தான் உண்டு. தாறுமாறான அதிருஷ்டம் என்பது இதுதான் போலிருக்கிறது.இருக்கட்டும்... இப்போது அவர் கார்த்திக்கின் விருப்ப நாயகியாகியுள்ளார். கார்த்தி நடிக்கும் அடுத்த படமான பிரியாணியில் சமந்தா தான் ஜோடி.வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவுக்கு சமமான வேடத்தில் நடிக்கிறார்.வழக்கம் போல யுவன் சங்கர் ராஜா இசையைக் கவனிக்க, சக்தி சரவணன் கேமிரா பிடிக்கிறார்.படத்தின் ஸ்க்ரிப்டுக்கு இறுதி வடிவம் கொடுக்க, சோனாவின் பார்ட்டியைக் கூட தியாகம் செய்துவிட்டு சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டனவாம். விரைவில் பூஜை அறிவிப்பு வரவிருக்கிறது!Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...
Vijay 's Thuppaki Latest Stills and Posters - Tamil Cinema Bazaar
Posted by NIsha
Thuppaki Latest Stills and Posters - Tamil Cinema Bazaar 1Read more » ...
விஜய் பிறந்த நாளில் ரிலீஸ்யாகும் பில்லா 2!
Posted by NIsha
அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பில்லா 2 வரும் ஜூன் 22-ம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது. அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது. பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கதுKeywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...