tamil cinema news: January 2012

Latest Stories

26 Sep 2013

Actress Sri Divya Latest Unseen Image Gallery

Actress Sri Divya Latest Unseen Images, Actress Sri Divya Latest Unseen photos, Actress Sri Divya Latest Unseen gallery, Actress Sri Divya Latest Unseen Hot images, Actress Sri Divya photos, Actress ...

    See More News

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

News

News

தானே புயலுக்கு கமல்ஹாசன் ரூ.15லட்சம் நிதியுதவி!

Posted by NIsha

தமிழகத்தை குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்டது தானே புயல். இந்த புயலால் பலர் வீடுகள், உடைமைகளை இழந்தது தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.  ஏற்கனவே ரஜினி, நடிகர் கார்த்தி குடும்பத்தார் ஆகியோர் நிதியுதவி அளித்து உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்காக புயல் நிவாரண நிதிக்காக ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக கமல்ஹாசன் இன்று வழங்கினார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, January 31, 2012

அஜித்,விஜய் படத்திற்கு இசை அமைக்க முடியுமா? இளையராஜா!

Posted by NIsha

பிரகாஷ்ராஜின் "தோனி" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது குருநாதர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இளையராஜா விஜய் - அஜித் படங்களில் வரும் பாடல்களை சூசகமாக கிண்டலடித்தார். அதுவும் மேடையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீற்றிருந்த போதே.... இசைஞானி விஜய், அஜித் பாடல்களை கிண்டலடித்தது ஹைலைட்!விழாவில் இளையராஜா பேசியதாவது : சிந்துபைரவி, படத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடலுடன் தியாகராஜர் கீர்த்தனையை கலந்து தந்திருந்தேன். அதே மாதிரி கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படத்திலும் கர்நாடக சங்கீதத்தில் புரட்சி செய்திருந்தேன் என பாராட்டப் பெற்றேன். அந்த மாதிரி பாடல்கள் இப்போது இல்லையே என்கின்றனர். திரையிசையில் அத்தைகய புரட்சிகளை எனக்கு முன்பே பல இசையமைப்பாளர்கள் செய்திருக்கின்றனர். உதாரணத்துக்கு "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" என்ற பாடலைப் போல் பல நல்ல பாடல்களை தந்திருக்கின்றனர். காலத்தால் அழியாமல் அவை இன்றும் ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது மாதிரியான பாடல்களை இன்று விஜய் படத்திற்கும் அஜீத் படத்திற்கும் தரமுடியுமா ? அதை...

Posted in: |

அவதார் போல கோச்சடையான் உருவாக்கப்படுகிறது - ரஜினி

Posted by NIsha

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் 'கோச்சடையான்' பூஜை நேற்று முன்தினம் சத்தமின்றி நடந்து முடிந்துவிட்டது.கே எஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கும் இந்த அனிமேஷன் 3 டி படத்தில் ரஜினியுடன் பெரும் நட்சத்திப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. சரத்குமார், கத்ரீனா, சினேகா, நாசர் என முன்னணிக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கத்தை மேற்பார்வை செய்கிறார். Motion Capturing தொழில்நுட்பத்துடன் ஹாலிவுட் படம் 'அவதார்' போல கோச்சடையான் உருவாக்கப்படுகிறது.இதுகுறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், "இன்று மறக்க முடியாத நாள். மறக்க முடியாத தருணம். பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என கோச்சடையான் பூஜை. என் கணவர் மீண்டும் மேக்கப் நாற்காலியில்... கோச்சடையானுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, January 30, 2012

கொதித்து விட்ட தமன்னா!

Posted by NIsha

வாமனன் பட இயக்குனர் அகமது, ஜீவாவை வைத்து படம் ஒன்று எடுக்கிறார். இதில் ஜீவாவுக்கு 2 ஜோடிகள். முதல் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீவா, த்ரிஷா முதல் முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.இரண்டாவது நாயகியையும் பெரிய ஆளாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் தனது மேனேஜரை தமன்னா வீட்டுக்கு அனுப்பியுள்ளர். மேனேஜரும் தமன்னாவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். கதையை கேட்ட அவர் த்ரிஷாவுக்கு பதிலாக நான் நடிக்க வேண்டுமா அல்லது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டுமா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.அதற்கு மேனேஜர் சேர்ந்து தான் ஆக்ட் கொடுக்கோணும் என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்து விட்டாராம் தமன்னா.இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் எனது மார்க்கெட் அடியாகவில்லை. மேலும் எனக்கு அந்த நிலையும் வராது என்று போய் உங்கள் இயக்குனரிடம் கூறுங்கள் என்று விரட்டி விட்டாராம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

சூர்யா ஜோடியாகும் ஹன்சிகா!

Posted by NIsha

மாப்பிள்ளை படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அப்படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'சின்ன குஷ்பு' என அவரது ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். தற்போது அவர் ஒப்பந்தமாகி இருக்கும் படங்கள் யாவும் இரண்டு நாயகிகள் கதையாக இருக்கிறது.'வேலாயுதம்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தாலும், ஜெனிலியா இன்னொரு நாயகியாக நடித்து இருந்தார். தற்போது சிம்புவுடன் 'வேட்டை மன்னன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.சிம்புவிற்கு நாயகியாக அல்லாமல் ஒரு கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ஹன்சிகா. நாயகியாக தீக்ஷா சேத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் இல்லாமல், மற்றொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கிறார். ஆக, மூன்று நாயகிகளில் ஒருவராக ஷன்சிகா இருப்பார். இருப்பினும், அது தனக்கு வித்தியாசமான பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்க்கொண்டாராம்.ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். "அனுஷ்கா நாயகியாக இருந்தாலும் எனக்கும் படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இயக்குனர் என்னுடைய பாத்திரத்தை அழகாக வடிவமைத்து இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால், தனக்கான ரசிகர் வட்டம் இன்னும் அதிகமாகும் என்று...

Posted in: | Sunday, January 29, 2012

அவமானப்பட்ட அமலா பால்!

Posted by NIsha

மைனா தவிர்த்து பெரிதும் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் சாதிக்காத அமலாபால் போடுகிற ஆட்டங்களைச் சொல்லிமாளவில்லை. படப்பிடிப்புக்கோ, ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளுக்கோ வரும்போது தனக்கு, அம்மாவுக்கு,அப்பாவுக்கு என்று பிஸினஸ் கிளாஸில் மூன்று டிக்கட்டுகளை பிடிவாதம் பண்ணி பெற்று விடுகிறார். நாளை நடைபெற இருக்கும் காதலில் சொதப்புவது எப்படி? ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த அமலாபாலிடம் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்ரெட்குமார், தன்பட புரமோசனுக்கும் சில டி. வி. சானல்களுக்கும் பேட்டி அளித்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் வைத்தாராம். இதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்ட அமலா பால், சொன்ன நேரத்தை விட 2 மணி நேரம் லேட்டாக வந்து சொதப்பினாராம். விவாகாரம் அதோடு முடியவில்லை. எங்கிட்ட ரெண்டு சேனல்னு சொல்லிட்டு மூனு பேரை வரச்சொலியிருக்கீங்க. என்னால அந்த சேனலுக்கு இப்போ பேட்டி தர முடியாது. அவங்கள உடனே வெளியே அனுப்புங்க என்று சற்றும் நாகரீகமில்லாமல் கத்தியிருக்கிறார். இதைக்கேட்டு டென்சனான அந்த மூனாவது சேனல் நிருபர், இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத.இந்த கோண வாய வச்சிக்கிட்டு ரொம்ப ஆடுனே, கிழிச்சி தொங்க விட்டுருவேன்...

Posted in: | Thursday, January 26, 2012

மீண்டும் அமிதாப்புடன் இந்திப் படத்தில் ரஜினி!

Posted by NIsha

28 ஆண்டுகளுக்கு முன்பு ராமாராவ் தயாரித்த அந்தா கானூன் படம்தான் இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்த கடைசி இந்திப் படமாகும்.இதுகுறித்து பூரி ஜெகன்னாத் கூறுகையில், சமீபத்தில் நான் ரஜினி சாரை சந்தித்துப் பேசினேன். அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்கப் போகும் புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். உடனே அதை அவர் ஏற்றுக் கொண்டார்.மேலும் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் பரவசமாக உள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு இணைந்து நடிப்பதால் ஏற்பட்ட பரவசம் இது.நீண்ட காலமாகவே ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. முயற்சித்தும் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் கை கூடியுள்ளது. அதேசமயம், இரு பெரும் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மலைப்பாகவும் உள்ளது என்றார் ஜெகன்னாத். ...

Posted in: |

விஜயை மனதாரப் பாராட்டிய கமல்!

Posted by NIsha

கமல் ஹாசனுக்காக விஜய் தனது நண்பன் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். படத்தைப் பார்த்த கமல் விஜய்யை மனதாரப் பாராட்டியுள்ளார்.இளைய தளபதி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நண்பர்களாக நடித்த நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலைகாட்டியிருக்கிறார் நடிகை இலியானா. படம் ஹிட்டான குஷியில் இருக்கும் விஜய் கமலுக்காக தனது படத்தை ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த உலக நாயகன் இளைய தளபதியின் நடிப்பை பாராட்டினார். இதனால் விஜய் படுகுஷியாகிவிட்டார்.அண்மையில் நடந்த கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய் அவருடன் சேர்ந்து நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, January 23, 2012

நண்பன் 10 நாட்களில் ரூ. 110 கோடி வசூல் சாதணை!

Posted by NIsha

விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின் டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.விஜய் மட்டுமல்லாமல் ஜீவா, ஸ்ரீகாந்தக், சத்யன், சத்யராஜ் என மற்ற கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.விஜய் பட வசூல் குறித்து இதுவரை படத் தயாரிப்புத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற...

Posted in: | Sunday, January 22, 2012

மே முதல் வாரத்தில் மாற்றான் ரிலீஸ்!

Posted by NIsha

சூர்யா - காஜல் அகர்வால் நடித்து வரும் படம் மாற்றான். கே வி ஆனந்த் இயக்குகிறார். ஏற்கெனவே சூர்யா நடித்த அயன் என்ற வெற்றிப் படத்தைத் தந்தவர் ஆனந்த். எனவே இப்போது மாற்றானுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப் படம், தமிழ் புத்தாண்டில் வருவதாக இருந்தது. ஆனால் இறுதிகட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில்தான் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என்பதால், இந்தப் படத்தை ஏப்ரல் 25-ம் தேதிக்குப் பிறகு அல்லது மே முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படமும் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

இந்தியில் ரீமேக் 3 படத்தில் அபிஷேக் பச்சன்!

Posted by NIsha

நடிகர் தனுஷின் மனைவியும், விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கும் 3 படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் பாலிவுட் படத்தின் ஹீரோவாக நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறிடி பாடல் உள்ளூர் தமிழர்களை உசுப்பேற்றி விட்டதைவிட பல மடங்கு மும்பை வட்டாரத்திலும், வெளிநாடுகளிலும் பிரபலமாகியிருக்கிறது. 3 படம் இன்னமும் ரீலிஸ் ஆகாத நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தனுஷை மும்பைக்கு வரவழைத்த அபிஷேக் பச்சன், 3 படத்தின் கதையை கேட்டாராம். அதோடு, அந்த படத்தினை இந்தியில் ரீமேக் செய்யும்படி ஐஸ்வர்யாவிடம் கேட்டுக் கொண்டதுடன், முக்கியமான ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார் அபிஷேக். அதென்ன கண்டிஷன்? இந்தியில் உருவாகும் 3 படத்தில் கண்டிப்பாக கொலவெறிடி பாடல் இடம்பெற வேண்டும் என்பதுதானாம். தமிழில் 3 படம் ரீலிஸ் ஆன பின்னர் பாலிவுட் 3 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, January 19, 2012

பில்லா 2 ரூ.5.30 கோடிக்கு வெளிநாட்டு உரிமை!

Posted by NIsha

அஜித்தின் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.5 கோடியே 30 லட்சத்திற்கு ஒரு பிரபல நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது. டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.கடந்த சில நாட்களாக பில்லா 2 படத்தின் விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பில்லா 2 படம் பற்றிய புதிய செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இப்படத்துக்கான உள் நாட்டு வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை அஜித் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News...

Posted in: |

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் விஜய்!

Posted by NIsha

தானே புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரி மற்றும் கடலூர். அரசியல் தலைவர்கள் நேரில் போய் ஆறுதல் கூறினாலும், இந்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் முழுமையாக சேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்த நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் முடிந்த வரை உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை புதுச்சேரிக்கு சென்ற விஜய் அங்கே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரிசி, வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள், வீடுகளை சீரமைக்க சிமெண்ட் கூரைகள் வழங்கினார்.மேலும் அதிக அளவு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிவாரண உதவி பெற்றவர்கள் விஜய்யை வாழ்த்திச் சென்றனர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: , | Tuesday, January 17, 2012

ரஜினி, கமல், சூர்யா வசூல் சாதணையை முறியடித்தார் விஜய்!

Posted by NIsha

நண்பன் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் பெரிய சாதணை படைத்துள்ளது . விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் 450க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இதில் சென்னையில் 27 திரையரங்குகளில் வெளியாகியது. திரைப்பட முதல் நாள் வசூலில் தொகுப்புக்கள் 15 கோடி இருந்தது, மற்றும் எண்ணிக்கை இப்போது சுமார் ரூபாய் 57 கோடி நிற்கின்றன.விஜய் தனது வாழ்க்கையில் சிறந்த செயல்திறன் கொடுக்கப்பட்ட கூறப்படுகிறது. சமமாக முக்கிய இலியான தனது வேதியியல், விஜய் மற்றும் இலியானஇடையே உணர்ச்சி லிப்-பூட்டு நகரத்தின் பேச்சு ஆக மற்றும் திரைப்பட ஒரு கூடுதல் ஊக்கம் கொடுத்து உள்ளது.   Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, January 16, 2012

என்.டி.டிவி-ஹிந்து டிவி கைமாறியது தினத்தந்தி!

Posted by NIsha

என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து வெளியாகவுள்ளதாகவும் மீடியா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation சென்னை தொலைக்காட்சி லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன.தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன.இந்த நிலையில் என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தினத்தந்தி வசம் கைமாறியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மாற்றம் செய்து களமிறக்க தினத்தந்தி தீவிரமாக உள்ளதாம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News,...

Posted in: | Thursday, January 12, 2012

நண்பன் ரிலீஸ் - பிரமாண்ட வெற்றி !

Posted by NIsha

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள நண்பன் திரைப்படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டின் த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி பேனர்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் பட குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers,...

Posted in: |

தியாகராயர் நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Posted by NIsha

தியாகராயர் நகரில் உள்ள பல வணிக வளாக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும், சிவிக் ஆக்ஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு நடத்தி தியாகராயநகரில் உள்ள பல கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் உள்ள பெரிய வணிக வளாகங்கள் உள்பட, 28 கடைகளுக்கு சீல் வைத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை தியாகராயநகரில் சீல் வைக்கப்பட்ட 28 கட்டிடங்கள் செவ்வாய்கிழமை மாலை திறக்கப்பட்டன. பொங்கல் வியாபாரத்திற்காக கடை திறக்க அனுமதி கிடைத்துள்ளதால் கடை உரிமையாளரும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, January 10, 2012

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் ஜோடி அமலாபால்!

Posted by NIsha

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகிற புதிய படத்தில் அமலாவை நடிக்க வைக்கலாமே என்ற கருத்து உருவாகியிருக்கிறதாம். இந்த ஆசை அஜீத்துடையதா, அல்லது விஷ்ணுவினுடையதா? தெரியவில்லை. மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருப்பதால் அவசரம் அவசரமாக ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். போட்டியில் அனுஷ்காவும் இருக்கிறார். அமலாவின் வீட்டை நோக்கியே திரும்பி இருப்பதால், மற்ற நடிகைகளுக்கும் ஒரே மனக்கஷ்டம். இதை இன்னும் அதிகப்படுத்துகிறது இன்னொரு தகவல்.இதற்கிடையில் இன்னொரு தகவல். தெலுங்கு படம் ஒன்றில் அண்ணியாக நடிக்கிறார் அமலா. அதுவும் யங் ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக. தமிழ்சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் என்றால் கதை சொல்லப் போன டைரக்டர் உயிரோடு திரும்புவாரா தெரியாது. ஆனால், தெலுங்கு என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டாராம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, January 9, 2012

துப்பாக்கி படத்தில் முக்கியமான வேடத்தில் மளையாள நடிகர் ஜெயராம்!

Posted by NIsha

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில் புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால், பிரச்சினை கிளம்பிவிடுமோ என்று பதறிப்போய் உள்ளார்களாம் படத்தின் இயக்குனரும் நடிகரும்.முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும் விஷயத்தை வெளியே சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம். அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்வியே எழுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News,...

Posted in: |

மீண்டும் விஜயை இயக்கும் பேரரசு!

Posted by NIsha

பேரரசு படம் என்றாலே ஒரு ஸ்பெஷல். பஞ்ச் டயலாக்களுக்கு குறைவிருக்காது. அதோடு இவரது படங்களுக்கு ஊர் பெயரையே டைட்டிலாக வைப்பார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய படங்கள் எல்லாமே ஓவர் சென்டிமென்ட் கம் ஆக்க்ஷன் என்றாலும் அந்த படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தவை. மற்ற நடிகர்களுடன் பேரரசு இணைந்த படங்கள் எல்லாம் பஞ்ச் டயலாக்குகள் இருந்தும் பிஞ்சுபோனதுதான் மிச்சம். பேரரசு மீண்டும் விஜய்யுடன் இணையப் போகிறார். விஜய்யிடம் ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லியிருக்கிறார் பேரரசு. அதைக் கேட்ட விஜய் கதை நல்லாயிருக்கு. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்ததும் ஆரம்பிச்சிரலாம் என்று சொல்லியிருக்கிறார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Sunday, January 8, 2012

நான் தவறு செய்துவிடேன் சிம்பு வருத்தம்!

Posted by NIsha

தமிழ் திரையுலகில் நண்பனின் முன்னோட்டக் காட்சியை பார்த்து விட்டு நடிகர் சிம்பு, நண்பனில் நடிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஆரம்பத்தில் சிம்பு தான் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனது. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார். அதன் பின்பு ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என்று ரசிகர்கள் மனதில் கருத்து பரவியது. இந்நிலையில் சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் நண்பன் குறித்து, நண்பன் படத்தின் முன்னோட்ட காட்சிகள் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன். ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema...

Posted in: | Saturday, January 7, 2012

தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருது!

Posted by NIsha

சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு 'எடிசன் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு. இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கிறது.இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவர் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest...

Posted in: |

கோச்சடையானில் அடுத்த மாதம் நடிப்பேன் - ரஜினி

Posted by NIsha

பூரண உடல்நலம் பெற்று, பழையபடி சுறுசுறுப்பாக வலம் வர ஆரம்பித்துள்ள ரஜினி, பத்திரிகையாளர்களிடம் பேசியிருப்பதும் இதுதான் முதல்முறை. ஒய்ஜி மகேந்திரன் நாடகம் பார்த்து முடித்த பிறகு, அதுகுறித்து நிருபர்களிடம் பேசியவர், அந்த நாடகத்தின் வசனங்களை தான் வெகுவாக ரசித்ததாகக் கூறினார்.அவரது உடல்நிலை குறித்துக் கேட்டபோது, நான் ரொம்ப நல்லா இருக்கேன். அடுத்த மாதம் கோச்சடையான் ஷூட்டிங்ல கலந்துக்குவேன், என்றார். நாடகங்கள் குறித்து பேசிய அவர், நாடகங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்ப நாட்களில் நாடகங்களில் நடித்துள்ளேன், என்றார்.ரஜினி பேசியதற்கு ஒரு நாள் முன்புதான், கோச்சடையான் இசை கோர்ப்புப் பணி குறித்து ஏ ஆர் ரஹ்மான் பேட்டியளித்திருந்தார். இந்தப் படத்துக்கான இசை வேலைகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ரஜினி மகேந்திரன் நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்!

Posted by NIsha

சென்னை வாணி மகாலில் வியாழக்கிழமை மாலை இந்த நாடகம் நடந்தது. மனைவி லதாவுடன் வந்திருந்த ரஜினி, நாடகத்தை முழுவதுமாகப் பார்த்தார்.பின்னர் ஒய்ஜி மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி உள்பட நாடகக் குழுவினரைப் பாராட்டினார்.உடல்நிலை சரியான பிறகு, அவர் கலந்து கொள்ளும் மூன்றாவது வெளி நிகழ்ச்சி இதுவே. ரஜினியைப் பார்க்க அரங்கிலிருந்தவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியவர்களை அருகில் அழைத்து போஸ் கொடுத்த ரஜினி, குழுவினரையும் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வைத்தார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, January 5, 2012

இந்திக்கு போகும் கில்லி!

Posted by NIsha

இளைய தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் அப்படி போடு பாட்டு சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து பாட்டின் பீட் இந்தி திரையுலகத்தில் அசத்தி வருகிறது. சமீபத்தில அமிதாப் பச்சான் தன்னுடைய படத்தின் ஒரு காட்சியில் 'அப்படி போடு 'பாடலின் ஒரு சில வரிகளை பாடி அசத்தினார். இந்நிலையில் பாட்டின் உரிமத்தை அக்ஷய குமார் வாங்கியுள்ளார். தற்போது தான் நடித்து வரும் நாம் ஹய் பாஸ் என்ற படத்தில் அப்படி போடு பாடலை ரீமேக் செய்துள்ளார். இந்த படம் முடிந்த பிறகு, தமிழில் கார்த்தி நடித்து ஹிட்டான சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்ஷய குமார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Wednesday, January 4, 2012

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்!

Posted by NIsha

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய அம்சமான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ரத்ன அங்கி அணிந்து அதிகாலையில் நம்பெருமாள் எழுந்தருளியதை ரங்கா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசித்தனர்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பெருமையுடன் அழைக்கப்படும் சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 25-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல்பத்து நிகழ்ச்சியின் நிறைவுநாளான புதன்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சென்னையில் திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை கூடல் அழகர்பெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News,...

Posted in: |

விஜய் அ‌‌ஜீத்தை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக பணிபு‌ரிவேன்?

Posted by NIsha

பில்லா 2-வில் நடித்து வரும் அ‌‌ஜீத், அடுத்து இரு படங்களில் நடிக்கிறார். முதல் படத்தை இயக்குகிறவர் விஷ்ணுவர்தன். ஏ.எம்.ரத்னம் தயா‌ரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதையடுத்து விஜய் இயக்கத்தில் விஜயா புரொடக்சன் தயா‌ரிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை ‌ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தத் தகவலை கலை இயக்குனர் சந்தானம் உறுதி செய்திருக்கிறார். இது பற்றி கூறியிருக்கும் அவா, தெய்வத்திருமகள் படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபு‌ரிந்தேன். ஆனால் விஜய்யின் அடுத்தப் படமான தாண்டவத்தில் பணிபு‌ரிய முடியவில்லை. வேறு இரண்டு படங்கள் முடிக்க வேண்டியிருப்பதால் தாண்டவம் வாய்ப்பு கைநழுவியது. ஆனால் விஜய் அ‌‌ஜீத்தை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக பணிபு‌ரிவேன் என்று தெ‌ரி‌வித்துள்ளார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

தனுஷ் சக நடிகர்? ஸ்ருதிஹாசன் விளக்கம்!

Posted by NIsha

நடிகர் தனுஷூடன் ஸ்ருதிஹாசன் நெருங்கி பழகுவதாகவும், அதனால் ஐஸ்வர்யா வீட்டில் புகைச்சல் உண்டாகியுள்ளதாக வந்துள்ள செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது தனுஷூடன் 3 படத்தில் நடித்து வருகிறார். படம் வெளிவருவதற்கு முன்பே 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறி பாடல் தனுஷை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கொலவெறி சொந்தக்காரர் தனுஷூம் - 3 படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாசனும் ரொம்பவே நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் தனுஷின் மாமனார் கொலவெறியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பற்றி கேள்விப்பட்ட ஸ்ருதி ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் வலைதளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த தகவல் முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது, தனுஷ் என்னுடன் நடிக்கும் சக நடிகர். ஐஸ்வர்யா எனது நெருங்கிய தோழி. இப்படிப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் வேதனைப்படுத்தும். புத்தாண்டு அன்று நான் என் தாயாருடன் கோவாவில் இருந்தேன். சினிமா நட்சத்திரம் என்றாலே வதந்திகளுக்கு ஆளாக...

Posted in: |

10ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி - கல்வி துறை அறிவிப்பு

Posted by NIsha

ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தேர்வு தேதி : 4-4-12 : தமிழ் முதல் தாள்9-4-12: தமிழ் இரண்டாம் தாள்11-4-12: ஆங்கிலம் முதல் தாள்12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்16-4-12: கணிதம்19-4-12: அறிவியல்23-4-12: சமூக அறிவியல்இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, January 3, 2012

வாசு இயக்கத்தில் ரஜினி!

Posted by NIsha

கோச்சடையான் முடிந்ததும் ராணா தொடங்கும் என கேஎஸ் ரவிக்குமாரும் அறிவித்துள்ளார். ரஜினி - ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வரும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்தான் இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது.கோச்சடையான் முடிந்ததும் ரஜினி ராணாவை எடுக்காமல், பி வாசு இயக்கத்தில் சிவாஜி பிலிம்சுக்காக ஒரு குறுகிய கால படம் ஒன்றை நடிக்க விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.35 நாட்கள் இந்தப் படத்துக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் அதற்குள் படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.   Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, January 2, 2012