tamil cinema news: April 2012

Latest Stories

26 Sep 2013

Actress Sri Divya Latest Unseen Image Gallery

Actress Sri Divya Latest Unseen Images, Actress Sri Divya Latest Unseen photos, Actress Sri Divya Latest Unseen gallery, Actress Sri Divya Latest Unseen Hot images, Actress Sri Divya photos, Actress ...

    See More News

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

News

News

கலகலப்பு மே 11ல் ரிலீசு!

Posted by NIsha

சுந்தர் சி தற்போது எடுத்து வந்த காமெடி படமான கலகலப்பு படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.முன்னதாக மசாலா கபே என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் தற்போது கலகலப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் இசை கடந்த 20ம் தேதி வெளியானது. படத்தின் பாடல்கள் ஆங்காங்கே ஒலித்தவாறு இருப்பதில் இருந்தே பாடல்கள் ஹிட் ஆகிவிட்டன என்று நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை.வரும் , மே 11ம் தேதி கலகலப்பு படம் வெளியாவதற்கான அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  படத்திற்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்துள்ளதால் படக்குழுவினரின் உற்சாகம் இன்னும் அதிகரித்துள்ளது.கோடை விடுமுறையை குடும்பத்தோடு சினிமா தியேட்டரில் கொண்டாட வரும் குடும்பங்களுக்கு நிச்சயம் கலகலப்பு படம் ஒரு சிறந்த காமெடி பொழுதுபோக்கும் அம்சம் நிறைந்த படமாக இருக்கும் என்று உறுதியாக கூறுகின்றனர் படக்குழுவினர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Friday, April 27, 2012

கௌதமை, சேரனை கவர்ந்த படம்!

Posted by NIsha

அறிமுக இயக்குனர் தங்கசாமி இயக்கியிருக்கும் ராட்டினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. கௌதம் வாசுதேவ மேனன் இசைத்தட்டை வெளியிட இயக்குனர் சேரன் பெற்றுக் கொண்டார். இயக்குனர்கள் கே.பாக்யரா‌ஜ், பிரபு சாலமன், சுசீந்திரன், பூ சசி என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.ராட்டினம் படத்தை இரு தினங்கள் முன்பு கௌதம் உள்ளிட்ட இயக்குனர்களுக்கு இயக்குர் தங்கசாமி திரையிட்டுக் காட்டியிருந்தார். படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என உளப்பூர்வமாக கூறியிருந்தார் கௌதம். தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ராட்டினம் நினைவுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ராட்டினம் படப்பாடல்கள் இளைஞர்களின் விருப்பத்துக்கு‌ரிய ‌ரிங்டோனாக அமையும் என்றார் சேரன்.மே மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் விநியோக உ‌ரிமையை வேந்தர் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, April 26, 2012

முதன் முறையாக ஜெயா பிக்சர்ஸ் விஸ்வரூபத்தை வெளியிடுகறது!

Posted by NIsha

விரைவில் சினிமாவுக்கென்று ஜெயா பிக்சர்ஸ் எனும் பேனரில் படங்களை தயாரிக்க, விநியோகிக்க ஜெயா டிவி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் மும்முரமாக இறங்கியுள்ளதாம்.இந்த சேனல் ஏற்கெனவே விஜய் நடித்த வேலாயுதம் படத்தை ஆஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டதாகக் கூறுகிறார்கள். அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் பெற்றது. அடுத்து கமல் நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் தியேட்டர் மற்றும் டிவி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளதாக விஷயமறிந்த வட்டத்தில் கூறுகின்றனர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால்!

Posted by NIsha

சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வளர்ந்து இருக்கும் அமலா பால், அடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி போட இருக்கி றார். அமீர் இயக்கும் ஆதி பகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி பூலோகம் என்ற படத்திலும், அடுத்து சமுத்திரகனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் சமுத்திரகனி இயக்கும் படத்தில் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் கதையை அமலாபாலிடமும் டைரக்டர் சொல்லிவிட்டார். அவருக்கும் கதை பிடித்து போய்விட்டதாம். இதுகுறித்து டைரக்டர் சமுத்திரகனி கூறுகையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக இருக்கிறது. இதனால் இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்க எண்ணினோம். இன்றைய சூழலில் அமலாபால் தான் அதற்கு பொருத்தமானவர். இரண்டு மொழியிலும் அவர் பிரபலம் என்பதால் அவரை அணுகியிருக்கிறோம். கதையும் அவருக்கு பிடித்து விட்டது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News,...

Posted in: |

சகுனி படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கிய வேந்தர் பிலிம்ஸ்!

Posted by NIsha

நடிகர் கார்த்தி நடிக்கும் சகுனி படத்திற்கு ரூ.23 கோடி விலை பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை பட வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படம் சகுனி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆன்டனி சேவியர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக உதயன் படத்தின் நாயகி ப்ரனிதா நடிக்கிறார். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயால் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சகுனி படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம் வேந்தர் பிலிம்ஸ் என்ற நிறுவனம். சமீபத்தில் அரவான் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருந்ததும் இதே நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, April 24, 2012

ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம்!

Posted by NIsha

ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடி முடித்து விட்டார்கள். ஷங்கரின் அடுத்த நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) ஷங்கரின் படத்தில் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இவ்வாறு படத்தின் பணிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஷங்கர் படத்தின் நாயகன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்தனர்.சூர்யா மற்றும் விக்ரம் இருவரிடம் ஷங்கர் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. சூர்யா மற்றும் விக்ரம் இருவரின் தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு சூர்யா தான் நாயகன் என முடிவு செய்து விட்டதாக செய்திகள் வலம் வந்தன. ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிவுற்ற உடன் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema...

Posted in: |

அஜித்தை நேரில் சந்தித்த கவுதம் மேனன்!

Posted by NIsha

சில மாதங்களுக்கு முன் கவுதம் மேனன் அஜித்தை வைத்து  திரில்லர் படத்தை இயக்கபோவதாக  வலுவான அடையாளங்கள் இருந்தன. படத்தின் தலைப்பு கூட விவாதிக்கப்பட்டது அது  “துப்பறியும் ஆனந்த்”.அஜித் மற்றும் கவுதம் இருவரும் பிஸியாக இருந்ததால்  திட்டம் கைவிடப்பட்டு விட்டது மற்றும் அஜித்திற்கும் கவுதமுக்கும் பிரச்சனை என வதந்திகள் நிறைய இருந்தன.சமிபத்தில் கவுதம் மேனன் அஜித்தை நேரில் சந்தித்து வதந்திகள் பற்றி முழுமையாக அஜித்திடம் கூறினார், அதற்கு அஜித் “நான் வதந்திகளை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை அதை பற்றி கவலை படாதீர்கள். பின்னர் கவுதம் மேனன் அஜித் பட திட்டம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்றார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Wednesday, April 18, 2012

பாரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மரியான்!

Posted by NIsha

தனுஷ் அடுத்து நடிக்கும் தமிழ் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வந்தே மாதரம் பாடலை இயக்கிய பாரத்பாலா இயக்கத்தில் மரியான் என்ற படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவர் தனது இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் மிகவும் சந்தோஷமாக தெரிவித்துள்ள மற்றொரு செய்தியும் உண்டு. அது, இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதுதான்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

பில்லா 2 படத்துக்காக ஹெலிகாப்ட‌ரிலிருந்து குதித்த அ‌‌‌‌ஜீத் !

Posted by NIsha

முதுகுத்தண்டில் ஏழு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர் அ‌‌‌‌ஜீத். ஒரேயொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டால்கூட நம்மால் ஒரு பக்கெட் தண்ணியை‌த் தூக்க இயலாது. ஆனால் அ‌‌‌‌ஜீத்...? சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சியிலும் அ‌‌‌‌ஜீத் அதிக ‌ரிஸ்க் எடுக்காததற்கு இந்த அறுவை சிகிச்சையே காரணம். கடுமையான முதுகு வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு கேரவனில் ட்‌‌ரீட்மெண்ட் எடுத்த நாட்கள் அதிகம். அதையெல்லாம் பில்லா 2-வில் அனாயசமாக கடந்திருக்கிறார். இந்தப் படத்தில் டூப் போடாமல் ‌ரிஸ்க்கான காட்சி அனைத்திலும் அ‌‌‌‌ஜீத்தே நடித்துள்ளார். குறிப்பாக ஹெலிகாப்ட‌ரிலிருந்து குதிக்கும் காட்சி. ஹெலிகாப்ட‌ரில் ஒரு கையில் தொங்கிவரும் அந்தக் காட்சி பார்க்கிற எவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். இது பற்றி இணையத்தில் எழுதியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் Stefan Richter ஸ்டண்ட் விஷயத்தில் நானே ஒரு டேர்டெவில். நம்புங்கள்... அ‌‌‌‌ஜீத் ஹெலிகாப்ட‌ரில் தாவி குதித்து ஒரு கையால் தொங்கியபடி வரு‌ம் காட்சியில் என்னுடைய நரம்புகளில் ரத்தம் உறைந்துவிட்டது என குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறாராம் அ‌‌‌‌ஜீத்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil...

Posted in: |

யோஹன் படத்தில் நடிக்கும் ஒரே ஒரு தமிழன் விஜய் - கௌதம்மேனன் தகவல்!

Posted by NIsha

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும், துப்பாக்கி முடிந்ததும் விஜய் யார் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த யோஹான்-அத்தியாயம் ஒன்று படம் காரணம் சொல்லப்படாமல் நிறுத்தப்பட்டது. இதை பற்றி பேசிய கௌதம் மேனன் யோஹான் கதை முழுமையாக தயாராகிவிட்டது. விஜய் இப்போது நடித்துக்க்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தை முடித்ததும் யோஹான் படம் துவங்கப்படும். இந்த படத்தில் நடிக்கும் ஒரே தமிழன் விஜய் தான். ஹீரோயின் ஒரு இந்தியப் பெண். மற்ற நடிகர்களும் நடிகைகளும் வெளிநாட்டவர்கள் என்றாலும் இது ஒரு தமிழ் படம் தான். இந்த படம் ஆங்கில சப்-டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியிடப்படும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். யோஹான் கதாபாத்திரத்தை நான் முழுமையாக வெளிக்கொண்டு வந்தாலோ, யோஹானை மக்கள் ஏற்றுக்கொண்டாலோ ஜேம்ஸ் பாண்ட் படம் போல யோஹான் பாகம்-2,3,4 என தொடர்ச்சியாக வெளிவரும் என்று கூறினார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online...

Posted in: | Tuesday, April 17, 2012

ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்குகிறார்!

Posted by NIsha

கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா. இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த புதிய படத்தில் தனுஷ் நடிக்கவில்லை.  எனது அடுத்த படத்தை எடுக்க நான் காத்திருக்க விரும்பவில்லை. சும்மாவே உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. பணியாற்றுவது எனக்குப் பிடித்துள்ளது. என் தாயாரும் மாமியாரும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால், இயக்குநராகப் பணியாற்றுவது சுலபமாக உள்ளது, என்கிறார் ஐஸ்வர்யா. இவர் எடுக்க‌ இருக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இப்படத்தில் பெயர் கதாநாயகி போன்ற விடயங்களை இன்னும் அறிவிக்கவில்லை.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, April 16, 2012

ஷங்கரின் அடுத்த கதாநாயகன் யார்? விக்ரமா! சூர்யாவா!

Posted by NIsha

ஷங்கரின் அடுத்த கதாநாயகன் யார்? விக்ரமா சூர்யாவா. அந்த அளவிற்கு கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான்.ஷங்கர் தான் அடுத்து எடுக்க உள்ள படத்திற்கு விக்ரமை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், விக்ரம், தற்போது நடித்து வரும் தாண்டவம் படப்பிடிப்பு முடிந்த உடன் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாகவும் விக்ரமின் தரப்பு கூறியுள்ளது. அதே சமயம், சூர்யாவிடமும் ஷங்கர் அலுவலகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் படத்தை முடித்துவிட்டு அடுத்து ஷங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும், சூர்யாவின் மேலாளர் தெளிவாகக் கூறுகிறார்.ஆனால் ஷங்கர் அடுத்து இயக்கப்போகும் படம், ஒன்றிற்கும் மேற்பட்ட கதாநாயகன்களை வைத்து எடுக்கும் படம் அல்ல என்றும் தெளிவாகக் கூறி நம்மைக் குழப்பிவிட்டனர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

இந்தி, தமிழ் நடிகைகளின் புது சம்பள பட்டியல்!

Posted by NIsha

கதாநாயகிகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி நடிகைகளின் சம்பளப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பிரியங்கா சோப்ராவை சமீபத்தில் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுதான் பெரிய சம்பளம் என்று கூறப்படுகிறது.   ஐஸ்வர்யாராய் எந்திரன் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி வாங்கினார் என செய்தி வெளியானது. தமிழ், தெலுங்கு பட கதாநாயகிகள் புதிய சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். நயன்தாரா காதல் சர்ச்சைகளுக்கு முன் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கினார். தற்போது பிரபுதேவா வுடனான காதலை முறித்து மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் சம்பளத்தை ரூ.1 1/2 கோடியாக உயர்த்தி உள்ளார்.  நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானாவும் ரூ.1 1/2 கோடி சம்பளம் வாங்குகிறார். இதுவரை ரூ.90 லட்சம், ரூ.1 கோடி என சம்பளம் வாங்கிய திரிஷா தனது சம்பளத்தை ரூ.1 கோடியே 20 லட்சம் என உயர்த்தி உள்ளார். பிரியாமணி ரூ.30 லட்சம் வாங்குகிறார். அனுஷ்கா, காஜல்அகர்வால், தமன்னா, டாப்சி ஆகியோரின் சம்பளமும் ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.  இந்தியில் கரீனாகபூர் ரூ.6 கோடியும், கத்ரீனாகைப் ரூ.3 கோடியும்,...

Posted in: |

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!

Posted by NIsha

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து அவர்களுக்கு விருந்தும் பரிசும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய், "இப்போது நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறேன்.இதை மனதில் கொண்டு மாணவர்கள் நன்கு படித்து பரீட்சை எழுத வேண்டும். மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து, பரிசு வழங்க ஆசைப்படுகிறேன்," என்றார் விஜய்,மாணவர்களுக்கு விஜய்யின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Friday, April 13, 2012

பில்லா 2 டிரைலர் வீடியோ இணைப்பு !

Posted by NIsha

அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பில்லா. அப்படத்தின் தொடர்ச்சியாக பில்லா-2 படம் உருவாகி வருகிறது. தூத்துக்குடியில் சாதரண மனிதனாக, டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. இதில் டேவிட்டாக அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி ‌டோல்டி இயக்குகிறார்.இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.பில்லா-2 திரை முன்னோட்டம்Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

தெலுங்கில் 3 படத்தை வெளியிட்டு ரூ.4.3 கோடி நஷ்டம் - தயாரிப்பாளர் புகார்!

Posted by NIsha

தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிரமாதமான ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வாரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.இப்படம் ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்த ஆந்திர தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான நட்டி குமார் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார். இந்த நஷ்டத்துக்கு காரணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாதான் என அவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், "தனுஷ்-ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். ஆந்திராவில் தனுசுக்கு உள்ள மார்க்கெட் ரூ.10 லட்சம்தான். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்குகிறாயே என்று பலரும் என்னை கண்டித்தனர்.ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையில் படத்தை வாங்கினேன். ஐஸ்வர்யா இயக்கி இருந்ததால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதினேன். 3 படத்தை ஆந்திராவில் விளம்பரபடுத்துவதற்காக ஏப்ரல் 1-ந்தேதி ஹைதராபாத் வருவதாக தனுஷும், ஐஸ்வர்யாவும் என்னிடம் உறுதி அளித்தனர். ஆனால் அதன்படி அவர்கள் வரவில்லை.படத்தின் சிறப்பு காட்சிக்கு வருவதாக சொல்லியும் வரவில்லை. இருவரும் என்னை ஏமாற்றி...

Posted in: | Wednesday, April 11, 2012

முதன்முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

Posted by NIsha

நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர். கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து...

Posted in: |

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடை?

Posted by NIsha

முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து, `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்துமத சன்யாசிகளையும், சாதுக்களையும் பற்றி காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் அவர்களை அவதூறாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளதாகவும், எனவே இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து தர்மா சக்தி அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தற்போது டி.வி.களில் `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தின் டிரைலர் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில், உளுந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெயரில் ஒரு சாமியார் கதாபாத்திரம் காட்டப்படுகிறது. அதில், இந்து சாமியார்களை அவதூறாகவும், கேலிக்கூத்தாகவும் சித்தரித்து காட்டுகின்றனர். அதன்மூலம் சாமியார்கள் மீது சமுதாயத்தில் தவறான எண்ணம் தோன்றுகிறது. இந்து சாமியார்களை பொழுதுபோக்கு அம்சமாக கொண்டு வந்துள்ளனர். இதனால் இந்து மத உணர்வுகளை காயப்படுத்துகின்றனர். எனவே ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை, இந்து மத சாமியார்களை அவதூறாக சித்தரிக்கும் காட்சிகளுடன் திரையிட அனுமதிக்க கூடாது. இந்த காட்சிகளுடன்...

Posted in: | Tuesday, April 10, 2012

பில்லா 2 படத்தின் டப்பிங், டிவி, இசை , வெளிநாட்டு உரிமை முந்தைய சாதனைகளை முறியடித்தது!

Posted by NIsha

அஜீத் நடித்து ஒரு படம் வெளிவருகிறது என்றால் அதற்கு முந்தைய படத்தின் சாதனைகளில் ஒரு  சாதனையை வெளிவரும் படம் மிஞ்சி விடும்.அந்த வரிசையில் தற்போது வெளிவர இருக்கும் பில்லா 2 படம் இதற்கு முந்தைய அஜீத் படங்களின்  பல சாதனைகளை முறியடித்து இருக்கிறது.இது வரை அஜீத் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் பில்லா  2. கேரளா, கர்நாடகா, தெலுங்கு டப்பிங் உரிமை, டிவி உரிமை, இசை உரிமை, வெளிநாட்டு உரிமை என  அனைத்து வரிசைகளிலும் அஜீத்தின் முந்தைய சாதனைகளை பில்லா 2 முறியடித்து இருக்கிறது.தற்போது பில்லா 2 படத்தின் தியேட்டர் உரிமையை இதுவரை அஜீத் படத்திற்கு கொடுக்காத  விலையை கொடுக்க தயாராக இருக்கிறார்களாம். இதுவும் அஜீத்தின் முந்தைய படங்களின் சாதனை  முறியடிக்கும் என்கிறார்கள்.   ஜுன் இரண்டாம் வாரத்தில்  வெளியாக கூடும் என்கிறார்கள்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, April 9, 2012

முதன் முறையாக தனுஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்!

Posted by NIsha

3 படத்தை தொடர்ந்து இந்தி படத்தில் பிஸியாக இருக்கும் தனுஷ், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா படம் வரைக்கும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். இப்போது ஜீவா-சமந்தாவை வைத்து நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். முதன்முறையாக இளையராஜாவை தனது படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார் கவுதம். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷூம், கவுதம் மேனனும் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாகவும், இதற்காக சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசியாக கூறப்படுகிறது. தற்போது தனுஷ் இந்தி படமான ரஞ்னாவிலும், அதற்கு அடுத்து பரத்பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல் கவுதமும் நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்க இருக்கிறார். இருவரும் தங்களுடைய படங்களை முடித்த பின்னர் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தபடத்திற்கு இசையமைக்க போவது கொலவெறி புகழ் அனிருத் என்றும் நம்பப்படுகிறது.Keywords: Tamil News, Tamilnadu...

Posted in: |

விக்ரம், தீபிக படுகோன் வைத்து இயக்கும் ஷங்கர்

Posted by NIsha

ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் ‘ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி ‘கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது.‘நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, April 5, 2012

அஜித்தை இயக்கும் வெங்கட்பிரபு, யுவன் சங்கர் ராஜா!

Posted by NIsha

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விரைவில் தயாரிப்பாளராக அவதரிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். இப்போது புதிய செய்தி என்னவென்றால் அவர் தயாரிக்க இருக்கும் அந்த படத்தில் அஜித் தான் ஹீரோவாம். சில பல ஆண்டுகளுக்கு முன்னர் டைரக்டர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய 3பேரும் சேர்ந்து ஒயிட் எலிபேன்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். நா‌ளடைவில் மூவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக அந்த தயாரிப்பு நிறுவனம் வெறும் பெயர் அளவில் மட்டுமே இருந்து வந்தது.இந்நிலையில், மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெங்கட்பிரபு-அஜித் கூட்டணி அமைக்கபோவதாக பலமுறை செய்தி வந்தது. இதை வெங்கட்பிரபுவும் உறுதிப்பட தெரிவித்து இருந்தார். அதன்படி வெங்கட்பிரபு-அஜித் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தை தான் யுவன் சங்கர் ராஜா, ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிக்க இருக்கிறாராம். மேலும் இப்படத்திற்கு யுவனே இசையமைக்க இருக்கிறாராம். விரைவில் இதுப்பற்றிய ‌தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu...

Posted in: |

துப்பாக்கி'ல நடிக்கிறேன் : ஏ.ஆர். முருகதாஸ் தகவல்!

Posted by NIsha

விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOKல் விஜய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார்.'துப்பாக்கி' படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு சிறு பாடல் இருக்கிறது. துப்பாக்கி படத்திற்கான THEME MUSIC வரும் வாரத்தில் தயார் செய்ய இருக்கிறோம்.படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 12ம் தேதி முதம் துவங்க இருக்கிறது. படத்தின் விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் வந்து விட்டால் அவரது தனது போனை தொடக் கூட மாட்டார். வேலையில் அவர் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News,...

Posted in: | Wednesday, April 4, 2012

கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் டும் டும் டும் - ரஜினி, கமல், விஜய்!

Posted by NIsha

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மகள் ஜனனிக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஆர் சதீஷ்குமாருக்கும் வரும் அடுத்த மாதம் 3-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. சமீபத்தில் இவ்விருவருக்கும் நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாக நடத்தப்பட்டுவிட்டதால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு திருமணமும் அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த இரு வாரங்கள் லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த கேஎஸ் ரவிக்குமார் இப்போது சென்னை திரும்பிவிட்டார். முக்கிய பிரமுகர்களுக்கு குடும்பத்தினருடன் போய் அழைப்பிதழ்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் கமல்ஹாஸன், விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் திரளாக வரவிருக்கிறார்கள். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

தனுஷின் 3 படம் தோல்வியால் கோச்சடையான் சூட்டிங் ரத்து!

Posted by NIsha

மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூடு அவுட்டான நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த சூட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்தின் சூட்டிங்கிற்காக கடந்த 17ம் தேதி ரஜினி, சவுந்தர்யா, சரத்குமார் உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் லண்டன் புறப்பட்டு சென்றனர். அங்கு விறுவிறுப்பாக சூட்டிங் நடந்து வந்தது. நேற்று கூட ரஜினி, சவுந்தர்யா உள்ளிட்ட கோச்சடையான படக்குழுவினர் இப்படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து பேட்டியளித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.இதுபற்றி விசாரித்த போது ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே தங்களது படங்களான 3 மற்றும் கோச்சடையான படங்களை புரோமஷனல்...

Posted in: | Monday, April 2, 2012

தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்குகிறார் லட்சுமி ராய்!

Posted by NIsha

நடிகை லட்சுமிராய் தன்னுடைய தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். முன்னணி நடிகையாக வலம் வர தொடர்ந்து போராடி வரும் லட்சுமிராய், அவ்வ‌ப்போது காஞ்சனா, மங்காத்தா போன்ற ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய தங்கை அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறார். இதற்கு வசதியாக எங்கே போனாலும் தனது தங்கையையும் கூடவே கூட்டிக் கொண்டு போகிறார். சமீபத்தில் கூட டில்லியில் நடந்த ரீமா சென்-ஷிவ்கரண் சிங் திருமணத்திற்கு அஸ்வினியையும் அழைத்து போனார். மேலும் சில தயாரிப்பாளர்களிடமும் தன் தங்கையை அழைத்து சென்று சான்ஸ் தேடி வருகிறார். லட்சுமிராயை போன்று விரைவில் அவரது தங்கை அஸ்வினியையும் திரையில் காணலாம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

பிரியாணி செய்து படக்குழுவை அசத்தினர் - தல அஜித்!

Posted by NIsha

நடிகர் அஜீத்குமார் ருசியாக பிரியாணி செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் கையால் மணக்க, மணக்க பிரியாணி செய்து படக்குழுவை அசத்துவார். பல நடிகைகள் அவரது பிரியாணிக்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம். அவ்வளவு அருமையாக சமைப்பார் அஜீத்.அவர் தனது குடும்பத்துடன் பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிடச் சென்றால் அங்கு என்ன சாப்பிடுகிறார்களோ அதை வீட்டுக்கு வந்தவுடனே சமைத்துப் பார்ப்பாராம். சரியாக வரவில்லை என்றால் உடனே அந்த ஷெப்புக்கு போன் போட்டு கேட்பாராம். அஜீத் கேட்டால் சொல்லாமலா இருப்பார்கள். ஷெப்பின் அறிவுரைப்படி அந்த உணவு வகையை செய்து முடித்த பிறகு தான் தல நிம்மதியாக இருப்பாராம்.பெண்களே சமைக்க எரிச்சல் படுகிற இந்த காலத்தில் ஓய்வு நேரங்களில் அஜீத் சமைத்து அனைவரையும் அசத்துவது பாராட்ட வேண்டிய விஷயம் தான். அவர் ஒரு பக்கம் சமைத்துக் கொண்டிருக்க மறுபக்கம் அவரது மனைவி ஷாலினி தங்கள் செல்ல மகள் அனோஷ்காவை விதவிதமாகப் போட்டோ எடுத்து ரசிக்கிறாராம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News,...

Posted in: | Sunday, April 1, 2012

சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் விருந்து வைத்து பாராட்டும் விஜய்!

Posted by NIsha

யாராவது நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்தால் உடனே அவர்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறாராம் இளைய தளபதி விஜய். விஜய் தான் எந்தப் படம் பார்த்தாலும் அதில் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர், நடிகையரின் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து பாராட்டு மழை பொழிகிறாராம். விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |