முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து, `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்துமத சன்யாசிகளையும், சாதுக்களையும் பற்றி காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் அவர்களை அவதூறாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளதாகவும், எனவே இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து தர்மா சக்தி அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தற்போது டி.வி.களில் `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தின் டிரைலர் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில், உளுந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெயரில் ஒரு சாமியார் கதாபாத்திரம் காட்டப்படுகிறது. அதில், இந்து சாமியார்களை அவதூறாகவும், கேலிக்கூத்தாகவும் சித்தரித்து காட்டுகின்றனர். அதன்மூலம் சாமியார்கள் மீது சமுதாயத்தில் தவறான எண்ணம் தோன்றுகிறது. இந்து சாமியார்களை பொழுதுபோக்கு அம்சமாக கொண்டு வந்துள்ளனர். இதனால் இந்து மத உணர்வுகளை காயப்படுத்துகின்றனர்.
எனவே ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை, இந்து மத சாமியார்களை அவதூறாக சித்தரிக்கும் காட்சிகளுடன் திரையிட அனுமதிக்க கூடாது. இந்த காட்சிகளுடன் படத்தை வெளியிடுவதற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த அவதூறு காட்சிகளுடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

0 comments for "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடை?"